புதுடில்லி, அக்.6 காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 9ஆ-ம் தேதி டில்லியில் நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு, 5 மாநில சட்டப் பேரைவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படவுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின் முதல் கூட்டம் அய்தராபாத்தில் கடந்தமாதம்
16-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டில்லியில் கட்சியின் தலைமை அலுவலகத் தில் வரும் 9-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தற்போதைய அரசியல் நிலவரம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்றவேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.
சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ் தானில் ஆட்சியை தக்கவைக்கவும், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சி யிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இந்த கூட் டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உரி மைகள் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல் விரைவில் அறிவிப்பு
புதுடில்லி, அக்.6 தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணை யம் இன்று (6.10.2023) முக்கிய ஆலோ சனை மேற்கொள்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்ட மன்றத் தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்ட மன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் 17-ஆம் தேதியுடன் முடிவடை கிறது. மற்ற மாநில சட்டசபை களின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதனை முன் னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த கூட்டத்தில் எடுக் கப்படும் முடிவுகளின் அடிப்படை யில் 5 மாநிலங்களுக்கும் அடுத்த சில நாள்களில் தேர்தல் அறி விக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிர தேசத் தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருவது நினைவு கூரத் தக்கது.