இலங்கை அரசை கண்டித்து இராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்

viduthalai
1 Min Read

ராமேசுவரம், பிப்.18 இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (17.2.2024) முதல் இராமேசுவரத் தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள்.

இராமேசுவரத்தில் 16.2.2024 அன்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மீனவர் சங்கத்தலைவர் சகாயம் தலைமையில் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சிறைபிடிக்கப்பட்டுள்ள இலங்கை வசம் உள்ள 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் நாட்டு படகுகளையும் மற்றும் மீனவர் களையும் உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் மீட்டு கொண்டு வர வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2018-ஆம் ஆண்டு வரை இலங்கை கடற் படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் விடு தலை செய்யப்பட்டும் பராமரிப் பின்றி சேதம் அடைந்து மூழ்கிப் போன தமிழ்நாட்டைச் சேர்ந்த 125 படகுகளுக்கும் அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியதில் இராமேசுவரத்தைச் சேர்ந்த 7 விசைப்படகுகள் விடுபட்டு விட்டன. இந்த படகுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண் டும். கடுமையான டீசல் விலை உயர்வினால் விசைப்படகுகளை இயக்கவே முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அரசால் மாதம் தோறும் விசைப்படகு ஒன்றுக்கு 1500 லிட்டர் மானிய டீசல் வழங் கப்பட்டு வருகின்றது. இதை 3 ஆயிரம் லிட்டராக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
காலவரையற்ற வேலை நிறுத்தம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (17.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடு வது என்றும், மேலும் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத் துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சேசு ராஜா, எமரிட், தட்சிணாமூர்த்தி உள் ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *