“இவர்தான் கலைஞர்!” பன்னாட்டு கருத்தரங்கம்
பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி
கருத்தரங்கத்தின் நிறைவு பேருரை ஆற்றினார்
தஞ்சாவூர், அக். 6 – தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கலைஞர் மு.கருணா நிதி அரசியல் அறிவியல் மய்யம் ஏற் பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா இன்று (6.10.2023) பல் நோக்கு உள்விளையாட்டரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அதனை யொட்டி முதல் அமர்வாக காலை 10 மணிக்கு ‘இவர்தான் கலைஞர்’ எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
பதிவாளர் பேராசிரியர் பூ.கு. சிறீ வித்யா அனைவரையும் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலு சாமி முன்னிலை வகித்தார்.
“சமத்துவப் போராளி மற்றும் குரு குல மாணவர்” எனும் தலைப்பில் பேராசிரியர் அ.கருணானந்தன்,
‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,
‘கலைத்துறைப் புரட்சியாளர்’ எனும் தலைப்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்,
‘எதிர்நீச்சல் வீரர்’ எனும் தலைப்பில் மேனாள் ஒன்றிய அமைச்சர் மக்க ளவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.
கருத்தரங்கில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர்களுக்கு Ôதந்தைபெரியாரின் முன்னோக்குப்பார்வைÕ நூலை வழங்கி சிறப்பு செய்து, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி கருத்தரங்கத்தின் நிறைவுப் பேருரை ஆற்றினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழக, திமுக பொறுப்பாளர்கள், தமிழ் நாடு, புதுச்சேரியிலிருந்து பெருந்திரளாக திரண்ட தோழர்கள், பேராசிரியர்கள், மாணவச் செல்வங்கள் கருத்தரங்க வளாகத்தில் நிறைந்திருந்தனர்.
இளநிலை முதலாம் ஆண்டு மாணவி க.அ. யாழினி நன்றி கூறினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா நிகழ்ச்சியை தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கலை ஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் மய்யம் ஒருங்கிணைத்தது.