நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திடம் தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் ஆறுதல்
நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மனிதநேயர் எஸ்.எஸ். இராஜ்குமார் ஆகி யோரின் சகோதரி தமிழரசி (வயது 67) (தந்தை பெரியா ரால் பெயர் சூட்டப்பட்டவர்) இன்று (17.2.2024) காலை காலமானார். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அவர்களிடம் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்கள்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், செயலாளர் அ.டேவிட், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றிய செய லாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.