பெரம்பலூர்,பிப்.17- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை இன்று (17.2.2024) காலை 10 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரையிலுள்ள தி.மு.க அலுவலக வளாகத்தில் தொடங்கியது. பயிற்சிப் பட்டறைக்கு மாவட்ட கழகத். தலைவர் சி. தங்கராசு தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு. விஜயேந்திரன் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் கி. முகுந்தன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா. அரங்கராஜன்,நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம்,நகர செயலாளர்
அ.ஆதிசிவம், ப.க. மாவட்டத் தலைவர் பெ. நடராஜன், மாவட்ட ப.க.செயலாளர் மருத்துவர் லகாந்தி, மாவட்ட அமைப்பாளர் பெ. துரைசாமி,நகரத் துணைச் செயலாளர் பெ. அண்ணாதுரை,மாவட்ட இளைஞரணி தலைவர் செ. தமிழரசன், வி.களத்தூர் பெரியார் பெருந்தொண்டர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி அறிமுக உரையாற்றினார்.தலைமைக் கழக அமைப்பாளர்
க. சிந்தனைச் செல்வன் தொடக்க உரையாற்றினார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் “பொருத் தமான இடத்தில் பொருத்தமான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. எந்த இடத்திலும் தந்தைபெரியார் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா. நாடாளுமன்றத்தில் வட நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெய் சிறீராம் என்று முழங்கும் போதுதமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘தந்தை பெரியார் வாழ்க’ என்று முழக்கம் எழுப்புவதன்காரணம் என்ன என்று தெரியாமல் வடநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகைக் கிறார்கள், தந்தை பெரியார் தான் தமிழர்களின் முன்னேற் றத்திற்கு காரணமானவர் .. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும், பெண்ணடிமை ஒழித்து பெண்களுக்கு சொத்துரிமை, படிப்பு ஆகியவை கிடைக்கவும் காரணமானவர்.
எங்கள் இளமைக் காலத்தில் இப்படிப்பட்ட பயிற்சி முகாமில் பங்கேற்க வாய்ப்பில்லைஉங்களுக்கு கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறவும் வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சிறப்புரையாற்றினார்.
கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையின் முக்கியத்துவத்தை விளக்கியும், கழக கட்டுப்பாடுகள் குறித்தும் விளக்கி சிறப்புரை யாற்றினார்.
பின்னர் வகுப்புகள் தொடங்கியது. “தந்தை பெரியார் ஒரு அறிமுகம் ” என்ற தலைப்பில் ஆசிரியர்
மா. அழகிரிசாமி வகுப்பு எடுத்தார். “பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள்” என்ற தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன், .”தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாதனைகள் ” என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.சி. வில்வம், “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை மு. விஜயேந்திரன், “இந்து இந்துத்துவா ஆர்எஸ்எஸ் “என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், “தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் துணைப்பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னா ரெசு பெரியார்ஆகியோர் வகுப்புகளை எடுத்து வருகின்றனர். மாணவர்கள் ஆர்வமுடன் குறிப்பெடுத் தனர். கழகப் பொறுப்பாளர்கள் புலவர் ராஜு, பெரியார் பெருந்தொண்டர் அரங்கையா, மகளிர் அணி பொறுப்பாளர் சூர்யா கலா சின்னசாமி, ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
75 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.