சென்னை, பிப்.17- ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகநாடு தழுவிய அளவில் நேற்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக சென்னையில் தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடு பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய தொழிற்சங்கங்கள், அய்க்கிய விவசாயிகள் அமைப்பு(எஸ்கேஎம்) உள்ளிட்டவை பிப்.16ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் அருகே மறியல், ஆர்ப் பாட்டம் போன்றவற்றை தொழிற்சங் கங்கள் நேற்று (16.2.2024) முன்னெ டுத்தன. அந்த வகையில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட் டம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடை பெற்றது.
இதற்காக அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே காலை9.30 மணி முதல் அனைத்து தொழிற்சங்கங் களின் உறுப்பினர்களும் குவியத் தொடங் கினர். அவர்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகபதாகைகளை ஏந்தியும், கண் டன முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தலைமை அஞ்சல் நிலையத்தை முற்று கையிட முயன்றனர்.
அப்போது தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் அவர்களைத் தடுக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக் கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில ருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை வாகனங்களில் ஏற மறுத்து, தரையில் அமர்ந்து தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களைச் சமாதானம் செய்து, காவல் துறை வாகனங்களில் ஏற்றி அண்ணா அரங்கத்துக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். சில மணி நேரங்களில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் தொமுச பொதுச் செயலாளர் மு.சண்மு கம், எம்.பி. கூறியதாவது:
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டை சீரழித் துள்ளது. வெள்ளை அறிக்கை என்ற பெய ரில் நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக் கையை சமர்ப்பித்து ஏமாற்றுகிறது. பா.ஜ.க. அரசை விரட்டும் நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்துகிறோம். டில்லி யில் விவசாயிகள் நடத்தும் மாபெரும் போராட்டத்தை ஒடுக்க பா.ஜ.க. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை யும் கண்டித்து இந்த போராட்டம் நடை பெறுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்துவோம். இவ் வாறு அவர் கூறினார்.
இப்போராட்டத்தில் கி.நடராஜன் (தொமுச), ஜி.சுகுமாறன் (சிஅய்டியு), ராதாகிருஷ்ணன் (ஏஅய்டியுசி), ராஜாசிறீதர் (எச்எம்எஸ்), அந்திரிதாஸ் (எம்எல்எஃப்), சேவியர் (அய்என்டியுசி), கே.பாலகிருஷ்ணன் (எஸ்கேஎம்) உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.