விழுப்புரம்,பிப்.17– விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க ‘ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று (16.2.2024) விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளரும், மேனாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
பா.ஜனதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட் டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக் கும் துரோகம் இழைத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு மோடி செய்தது என்ன? வளர்ச்சி என்ன இருக் கிறது என்று பேசுவதற்கு பா.ஜன தாவில் யாருக்கும் தைரியம் இல்லை.
தெரு, தெருவாக பொய் பேசு வதற்காகவே அண்ணாமலை இருக்கிறார். அவர் ஒரு நாளைக்கு 100 பொய்யையாவது சொல்வார், பொய் சொல்லாவிட்டால் அவ ருக்கு தூக்கம் வராது. மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். இந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்கள் யாரையாவது வாழ வைத்திருக்கிறாரா?
மோடி காலையில் ஒரு வேடம், மாலையில் ஒரு வேடம் போடுவார்.
ஒவ்வொரு மாநிலத் திற்கு ஏற்றவாறு ஆடை அணிந்து மோடி ஏமாற்றுகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பா.ஜனதாவிற்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளார். இது யார் வீட்டு பணம், யார் கொடுத்தார்கள் என்று தெரிய வில்லை. காங்கிரஸ் கட்சியின் பணத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை டில்லியில் மோடி நடத்தி வருகிறார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண் டும்.
தி.மு.க. அமைச்சர்களின் வீடு களுக்கும், எதிர்க்கட்சியினரின் வீடுகளுக்கும் அமலாக்கத் துறையை அனுப்புகிறார் மோடி. கடந்த 2016 தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் ரூ.570 கோடி பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணை யத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அந்த பணம் யாருடையது என்று விசாரணை செய்ய சி.பி.அய்.க்கு நீதிமன்றம் உத்தர விட்டு 8 ஆண்டுகள் ஆகிறது.
ஆனால் இதுவரை யாருடை யது என வெளியிடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை. இது மோடிக்கு சொந்த மான பணம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.
இந்த சந்தேகத்தை தெளிவுப்படுத்த வேண்டிய கடமை ஒன்றிய அரசின் கடமை. கருப்புப் பணம் மீட்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்படுமென மோடி அறிவித்து அதனை செயல்படுத்த வில்லை.
ஆனால், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தேர் தல் வாக்குறுதியில் அளித்தது போன்று குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் செலுத்தி வருகிறார். இதுபோன்று கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறை வேற்றியுள்ளார்.
10 ஆண்டுகாலத்தில் மோடி அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய் துள்ளது. விலைக்கு வாங்கப் பட்ட அரசியல்வாதிகளை வைத்து அவர் ஆட்சி நடத்தி வருகிறார்.
மோடியின் பொய் பிரசாரம் இந்த தேர்தலில் எடுபடாது. மு.க.ஸ்டாலின் தலைமையி லான இந்தியா கூட்டணி மகத் தான கூட்டணி, இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழ்நாடு, புதுச்சேரியில் சேர்த்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
-இவ்வாறு அவர் பேசினார்.