காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கம்

viduthalai
3 Min Read

எதிர்ப்பு வலுத்த நிலையில் 4 மணி நேரத்தில் மீண்டும் செயல்படத் துவங்கியது

புதுடில்லி, பிப்.16 மக்களவையின் 543 இடங் களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங் களுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
தேர்தல் குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
இதனால், தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்பட அவை இரண்டின் கூட்டணி கட்சிகள், நாடு முழுவதும், தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான் (Ajay Maken) இன்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து அஜய் மக்கான் தெரிவித்ததாவது:
பொது மக்களிடமிருந்து நிதி (crowdfunding) பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக் குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர் காங் கிரசின் கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில் இந்த முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ரூ.210 கோடி வருமான வரி பாக்கிக்காக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அஜய் தெரிவித்தார்.
2018இல் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த “தேர்தல் பத்திர திட்டம்” செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று (15.2.2024) தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் பரவலாக வரவேற்றுள்ளன.
இப்பின்னணியில் தற்போது காங்கிரஸ் கட்சி யின் வங்கிக் கணக்குகள் முடக்கம் நடைபெற்றுள் ளதாக அரசியல் விமர்சகர்களின் பார்வை உள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். கணக்குகள் முடக்கப் பட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் கணக்குகள் செயல்படத்துவங்கின.

தோல்வி பயத்தால் துவளும் பா.ஜ.க.
எதிர்க்கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்க தெருத் தெருவாக அலையும் அவலம்
மும்பை, பிப்.16 வரவிருக்கும் மக்கள வை தேர்தலில் 48 தொகுதிகளைக் கொண்ட மகாராட்டிராவில் “இந் தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கி ரஸ் – தேசியவாத காங்கிரஸ் (சரத்) – சிவ சேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன. பாஜக – தேசியவாத காங்கிரஸ் (அஜித்) – சிவசேனா (ஷிண்டே) மூலம் தேசிய ஜன நாயகக் கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
சமீபத்தில் வெளியான ‘இந்தியா டுடே’ – சி வோட்டர் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் (சரத்) – சிவசேனா (உத்தவ்) கட்சி களின் எம்விஏ கூட்டணி 45 சதவீத வாக்குகளுடன் 28 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும், பாஜக கூட்டணி 40 சதவீத வாக்குகளுடன் 20 இடங்களை தாண்ட வாய்ப்பில்லை என்றும் கருத்துக்கணிப்பில் கூறப் பட்டது.
கருத்துக்கணிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் எம்விஏ கூட்டணி கட்சித் தலைவர்களை இழுக்க பாஜக தீவிரமாக களமிறங் கியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச் சருமான மிலிந்த் தியோரா ஏக்நாத் தலைமையிலான சிவசேனா கட்சியி லும் (மாநிலங்களவை பதவிக்காக கட்சியில் மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்), மகாராட்டிரா மேனாள் முதலமைச்சருமான அசோக் சவாண் பாஜக விலும் இணைந்தனர். இருவரையும் மாநி லங்களவை ஆசை காட்டி பாஜக வளைத்துள்ள நிலையில், எம்விஏ கூட்ட ணியில் இருந்து மேலும் சில தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க மகாராட் டிரா மாநில வீதிகளில் பாஜக அலைந்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *