புதுடில்லி, பிப்.16 தலைநகர் ஷிங்கு எல்லையில் தொடர்புகைக் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட குருதாஸ்பூரைச்சேர்ந்த விவசாயி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஒன்றிய அரசிடம், குறைந்த பட்ச ஆதார விலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தலைநகர் டில்லிக்கு விவசாயிகள் 13.02.2024 அன்று டிராக்டர்களில் சென்றனர்.
ஆனால் அவர்களை தலைநகரில் அனைத்து எல்லையிலும் தடுத்து நிறுத்தி, இரவு பகல் பாராமல் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளால் தொடர்ந்து காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச்சேர்ந்த ஞான் சிங் (வயது 62) என்ற விவசாயி தொடர் நச்சுப்புகை வீச்சால் பாதிக்கபட்டு போராட்டக் களத்திலேயே உயிரிழந்தார். முதலுதவி அளித்தும், அவரை மேல் சிகிச்சைக்கு தலைநகர் டில்லிக்கு எடுத்துச்செல்ல பாதைகள் முழுமையாக அடைத்துவிட்டதால் செல்ல முடியாமல் அவர் வழியிலேயே உயிரிழந்தார் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
டில்லி விவசாயிகள் போராட்டம் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு – விவசாயி மரணம்!
Leave a Comment