தருமபுரி,பிப்.16– கோவில் உண்டி யலில், ரூ.1 கோடி கடனை தீர்த்து வை முருகா என பக்தர் ஒருவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடந்தது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா நடந்து முடிந்தது.
அப்போது ஏராளமான பக்தர் கள் முருகனை தரிசித்து சென் றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வழக்கமாக தங்களது வேண்டுதல்களை கடவுளிடம் வைப்பார்கள்.
மனமுருகி வேண்டிக் கொள் வார்கள். இங்கே ஒரு பக்தர் கடவுளிடம் வேண்டுதலை வைத் தது மட்டுமல்லாமல் அதனை துண்டுச் சீட்டில் எழுதி உண்டி யலில் போட்ட நிகழ்வு அரங்கேறி யுள்ளது.
தைப்பூச தேர் திருவிழா முடிந்த பிறகு ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் 13.2.2024 அன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி கோவில் வளா கத்தில் நடைபெற்றது.
அப்போது காணிக்கை பணத் துடன் சுப்பிரமணியசாமிக்கு, பக்தர் ஒருவர் எழுதிய உருக்கமான வேண்டுதல் கடிதம் ஒன்று உண்டி யலில் கிடந்தது.
அந்த கடிதத்தில் தான் யார் யாருக்கு எவ்வளவு கடன் தர வேண்டும்? நகைக் கடன், சங்கக் கடன், வீட்டுக் கடன் எவ்வளவு தொகை என தனித்தனியாக அந்த பக்தர் எழுதி உள்ளார்.
மொத்தம் ஒரு கோடி ரூபாய் கடன் பிரச்சினையை தீர்த்து வை முருகா என்று அதில் குறிப் பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு ஒருவர் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த கடிதத்தை எழுதியவர் யார் என்ற விவரம் குறிப்பிடவில்லை.
இப்படியும் ஒரு வேண்டுதல்! ரூ.1 கோடி கடனை தீர்த்து வைக்க கோரிக்கை கோவில் உண்டியலில் பக்தரின் கடிதம்
Leave a Comment