ஆவடி,பிப்.16- ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருவதை கண்டித்து ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் ஆலோசனையின் பேரில் 14-2-2024 புதன் கிழமை மதியம் 12.30 மணிக்கு செயலாளர் க.இளவரசன் தலைமையில் துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை, திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், ஆவடி நகர தலைவர் முருகன், செயலாளர் தமிழ்மணி, துணைத் தலைவர் சி.வச்சிரவேல், பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன், மாவட்ட ப.க. துணைத்தலைவர் ஜெயராமன் ஆகியோர் கோயில் அகற்றப்படவேண்டும் என்றும் அதற்கான தமிழ்நாடு அரசின் உத்தரவையும் இணைத்து, தலைமை மருத்துவ அதிகாரியை சந்தித்து அளிக்க சென்றனர். பணி நிமித்தமாக அவர் வெளியே சென்றிருப்பதால் அவரது உதவியாளரிடம் அளித்தனர். அவரும் தலைமை மருத்துவ அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.
ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயிலா? நடவடிக்கை எடுக்கக்கோரிய கழகப்பொறுப்பாளர்கள்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books