1,606 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தானாம்
குஜராத் சட்டமன்றத்தில் கல்வி அமைச்சர் தகவல்
காந்திநகர்,பிப்.15- பாஜக ஆளும் குஜராத் மாநில சட்டமன்றத் தில் நிதி நிலை கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப் பினர் துஷார் சவுதிரி,”மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதால், பெரும்பா லான தொடக்கப் பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளதாகவும், பள்ளிகளில் எப்போது காலிப்பணியிடங்களை நிரப்பப் போகிறீர்கள்” என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த குஜராத் கல்வி அமைச்சர் குபேர் திண்டோர்,”மாநிலத்தில் 32,000க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அதில் 1,606 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். கூடிய விரைவில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்போம்” என அவர் கூறினார்.
அமைச்சரின் பதிலுரைக்கு அடுத்து பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஷைலேஷ் பர்மர்,”கடந்த 2 ஆண்டுகளாக அரசு இதையே சொல்கிறது. ஆனால் 19,000 ஆசிரியர் காலிப்பணி யிடங்களை நிரப்பியபாடில்லை. கடந்த கல்வியாண்டில் (2022-2023) ஒரே ஒரு ஆசிரியர் பணி புரிந்த பள்ளிகளின் எண்ணிக்கை 700 ஆக இருந்த நிலையில், அடுத்த ஒரே ஆண்டில் 1,606 ஆக அதிகரித்துள் ளது. அதாவது 11 மாதங்களில் இரண்டு மடங்காக மாறியுள்ளது. அறிவிப்பு வெளியிடும்போது இருக் கும் வேகம் செயல்பாட்டில் இருக்க வேண் டும்” என குஜராத் பாஜக அரசை கடுமையாக சாடினார்.
அமித் ஷா அதிர்ச்சி
மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது சொந்தத் தொகுதியான குஜராத்தின் காந்தி நகர் மற்றும் அகமதாபாத்தை வட்டமடித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அகமதாபாத்தில் ரூ.1,950 கோடியில் வளர்ச்சிப்பணி என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அகமதாபாத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரை யாடுவது போல காட்சிப் பதிவு களையும் நடத்தினார். அமித் ஷாவின் பள்ளி ஒளிப் படங்கள் மற்றும் காட்சிப் பதிவு வைர லாவதற்கு முன்பே குஜராத் மாநிலத்தின் கல்வி நிலையை (ஒரே ஆசிரியருடன் 1606 பள்ளிகள்) அம்மாநில அமைச்சர் போட்டு டைத்த விவகாரம் இணையத்தில் முதலிடம் பெற்று டிரெண்ட் ஆகி வருகிறது. இத்தகவல் பரவியதை யடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் அதிர்ச்சிக்குள்ளானார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.277 கோடிக்கு என்ன செலவு?
குஜராத்தின் கிர் சரணாலயத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிய சிங் கங்கள் இருந்தன. ஆனால் 2020இன் கணக்கின் படி 238 சிங்கங்கள் இறந்துவிட்ட நிலையில், சரணா லயத்தில் சிங்கங்கள் இருப்பு எண் ணிக்கை 674 ஆக குறைந்தது. பிரதமர் மோடி கிர் சரணாலயத்தை அடிக்கடி அரசியல் ஆதாய பேச்சை வெளிப்படுத்தினாலும், சரணால யத்தில் சிங்கங்கள் உயிரிழப்பு விவகாரம் தொடரும் சர்ச்சை யாகவே உள்ளது.
இந்நிலையில், 2020 இலிருந்து 2024 வரை கிர் சரணாலயத்தில் சிங்கங்களின் இருப்பு எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை தொடர்பான அடுத்த கட்ட அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது நடைபெற்று வரும் குஜராத் மாநில சட்டமன்ற நிதி நிலை கூட்டத் தொடரில் அம்மாநில வனத்துறை அமைச்சர் முகேஷ் படேல், சிங் கங்களைப் பாதுகாப்பதற்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.277 கோடிக்கு மேல் அரசு செலவழித்துள்ளதாக செலவு தொகையை மட்டும் தெரிவித்துதுள்ளார். அப்படி என்ன செலவு செய்யப்பட்டது என்று அவர் கூற மறுத்து விட்டார்.
ரூ.277 கோடிக்கு அப்படி என்ன செலவு செய்யப்பட்டது என அவர் மேலும் பதிலளிக்க மறுத்துள்ள நிலையில், இது ஊழல் தொடர்பான செய்தியாக குஜராத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இதெல்லாம்தான் குஜராத் மாடலோ?