சாலை விதி மீறல்கள்
பொதுமக்களும் படம் எடுத்து அனுப்பலாம் அதன் மீது அபராதம் விதிக்கப்படும்
சென்னை, பிப்.15 சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட் டிகளை பொதுமக்கள் தங்களது அலைபேசியில் படம் பிடித்து அனுப்பினால், அதை அடிப் படையாக வைத்தும் போக்குவரத்து காவல்துறையினர் அப ராதம் விதிக்க உள்ளனர்.
போக்குவரத்து விதி மீறல், சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ‘நீங்க ரோடு ராஜாவா?’ என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் விழிப்புணர்வு காட்சிப் பதிவு போக்குவரத்து காவல்துறையினர் தயார் செய்திருந்தனர்.
இதில், நடிகர் சாந்தனு பாக்ய ராஜ், நடிகை அர்ச்சனா உள்ளிட் டோர் நடித்துள்ளனர். அதே போல் சிக்னல்களில் எல்லைக் கோட்டை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றொரு குறும்படத்தை இயக்கி உள்ளார். இதில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார்.இரு போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிட்டுவிழா வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (14.2.2024) நடைபெற்றது.
இந்த குறும்படங்களை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன், அவரது தாயார்மீனாகுமாரி ஆகி யோர் இணைந்துவெளியிட்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணை யர் ஆர்.சுதாகர் பேசியதாவது:
தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மீது அபராத நடவடிக்கையைத் தீவிரப்படுத்திய தால், தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்பு சதவீதம் குறைந்துள்ளது.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சியாக ‘நீங்க ரோடு ராஜாவா?’என்ற பெயரில் எடுத்துள்ளோம். யாரேனும் சாலைகளில் தவறானபாதைகளில் சென்றால் அவர்களை அலை பேசியில் படம் பிடியுங்கள். அதை@roadraja என்ற சமூக வலை தளத்தில் பதிவிடுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அப ராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது, “என்னுடைய அப்பா,அம்மா காவல் துறையைச் சேர்ந்தவர்கள். நான் அய்பிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தற் போது நான் திரைப்பட இயக்குந ராக இருந்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார். நிகழ்ச்சியில் போக்கு வரத்து இணை ஆணையர் மகேஷ் குமார், துணை ஆணையர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.