தாம்பரம், பிப்.15- 10.02.2024 அன்று மாலை 6 மணியளவில் தாம்பரம் பெரியார் வாசகர் வட்டத்தின் மூன்றாவது சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ‘பா.ஜ.க.வின் மத வாத அரசியல்’ என்னும் தலைப்பில் தோழர்கள் பலரும் கருத்துரையாற் றினர்.
இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய நமது ‘விடுதலை’ வாசகர் செங்கல்பட்டு மு.பார்த்த சாரதி (வெற்றிலை வியாபாரி), ஆரியர்கள் நமது மக்களை எப்படி அடிமைப்படுத்தினர் என்றும், நமது தமிழ் இலக்கியங்களை எப்படி திரித்து பொருள் எழுதினர் என்பதை பற்றியும் பேசினார்.
அடுத்ததாக பேசிய மலேசியா வில் இருந்து சென்னை புத்தகக் கண்காட்சிக்காக வருகை புரிந்த மலேசியா நாட்டை சார்ந்த அன் பழகன் தந்தை பெரியார் மலேசியா வந்தபோது அவர் பேசிய கருத்து களை எடுத்துரைத்தார்.
அடுத்ததாக பேசிய தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக செயலா ளரும் தாம்பரம் பெரியார் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளரு மான கோ.நாத்திகன், பா.ஜ.க.வின் மதவாத அரசியல் கொஞ்சம் கூட பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் என்றும், புராண கதைகளில் உள்ள முரண்களை குறிப்பிட்டும் பேசினார்.
அடுத்ததாக பேசிய திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், தாம் பரம் பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவருமான ஆதிமாறன், வரக் கூடிய நாடாளுமன்ற தேர்தலுக் காக மிக சூட்சமமாக ராமன் கோயில் உள்ளிட்ட சில ஏற்பாடு களை பா.ஜ.க செய்து வருகிறது என்றும், அதை நாம் முறியடிக்க வேண்டும் என்றும் கூறி, இது போன்ற கருத்துகளை பொது இடத்தில் நாம் மக்களி டையே கொண்டு கூற வேண்டும் என்ற தன் விருப்பத்தை வாசகர் வட்டத்தில் தெரிவித்தார்.
அடுத்ததாக பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாம்பரம் மேற்கு பகுதி செயலாள ரும், தாம்பரம் பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளருமான துரை. மணிவண்ணன் கூறுகையில், உலகில் உள்ள மிக மோசமான மனித விரோத தன்மை எது என்று பார்த்தீர்கள் என்றால், அது நாசிசம், பாசிசம், பிராமினிசம் இவை மூன்றையும் அடிப்படை யாக கொண்டதுதான்.
ஆர்.எஸ்.எஸ்., இந்து மதத்தை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பிற மதங்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி இந்து மக்களுக்காக ஒன்றுமே செய்ய வில்லை என்பதை குறிப்பிட்டும் பேசினார்.
தொடர்ந்து, நமது தாம்பரம் பெரியார் புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் நாள் தோறும் மாலை வந்து நன்கொடை செலுத்தி ‘விடுதலை’ நாளிதழை பெற்று செல்லும் கல்லூரி மாணவி அனுசுயா பேசுகையில், “உலகில் உள்ள அனைவருமே பகுத்தறிவா ளர்கள் தான்.
ஏனெனில், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வீட்டை பூட்டி விட்டு செல்லும் பட்சத்தில் எவருமே கடவுளை நம்பவில்லை என்றுதானே பொருள்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தோழர் அ.தும்மா பிரான்சிஸ், “இத்தனை ஆண்டுகள் நாம்- நம் முடைய இனத்தின் எதிரி யார் என்று தெரியாமல் போராடிக் கொண்டிருந்தோம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் நாம் இந்த ஆரிய எதிரிகளுடன் போராடிக் கொண்டு வருகிறோம் என்றும், நம் எதிரிகளை நாம் வீழ்த்த வேண்டுமென்றால் பெரியாரை நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம். அந்தப் பணியினை பெரியார் வாசகர் வட்டம் செய்யும் என்று உரை யாற்றினார்.
இந்த நிகழ்வில் 11.2.2024 அன்று பிறந்த நாள் காணும் கோ.நாத்திகன் அவர்களுக்கு சிறப்பு செய்து கலந்து கொண்ட அனை வரும் வாழ்த்தினர்.
தொடர்ந்து, சிவகங்கை மா.சந் திரன் மகள் ச.இராஜலட்சுமிக்கு புத்தகம் வழங்கி பயனாடை அணி வித்து சிறப்பு செய்தனர் விழாக் குழுவினர்.
தொடர்ந்து, கல்லூரி மாணவி அனுசுயாவுக்கு ஆதிமாறன் புத் தகம் வழங்கி பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.
மு.பார்த்தசாரதி அவர்களுக்கு புத்தகம் வழங்கி பயனாடை அணி வித்து சிறப்பு செய்யபட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தின் மூத்த தோழர் சந்திரன் அவர் களின் படம் திறந்து வைக்கப் பட்டது.
அவர் எந்த அளவுக்கு கொள் கைப் பிடிப்போடு இருந்தார், இந்த புத்தக நிலையத்தை எந்த ளவுக்கு கட்டிக் காத்தார், அவர் தாம்பரம் பெரியார் புத்தகக் கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தோழர்களுடன் எவ்வாறு பழகி வந்தார் என்பதைப் பற்றியும் நிலை யத்திற்கு வரக்கூடிய மக்களிடம் பெரியார் பற்றியும், அவர் கொள் கைகளை பற்றியும் பிரச்சாரமாகக் கொண்டு சென்று மக்கள் மனதில் புகுத்துவது என்பது அவருக்கே உரிய தனிச் சிறப்பு என்று அவர் மகன் ச.மாணிக்கவாசகன் உரை யாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் சிவ கங்கை மா. சந்திரன் நினைவாக தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன் அவர்களிடம் ‘விடு தலை’ சந்தா வழங்கினார்கள் குடும்பத்தினர்.
மஞ்சை வசந்தன் உரை
தொடர்ந்து சிறப்புரையாற்ற வருகைத் தந்த மஞ்சை வசந்தன் அவர்களுக்கு படப்பை செ.சந்திர சேகர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
அவர் சிறப்புரையில்,
தந்தை பெரியார் இந்த இயக் கத்தை தோற்றுவித்ததே இன அடிப்படையில் தான், திராவிடர் கழகம் என்றால் மதமல்ல; அது ஓர் இனம்.
ஓர் இனத்தை சார்ந்து ஏன் பெரியார் இயக்கத்தை அமைத் தார் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இனத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு. ஒன்று உல கத்திலேயே மூத்த குடி தமிழ்க்குடி. மூத்த மொழி தமிழ் மொழி. அதுமட்டுமின்றி உலகில் உள்ள பல மொழிகள் ஆங்கிலம் உட்பட தமிழில் இருந்து வந்தது என ஆதாரத்துடன் கூறினார்.
இந்த உலகில் பெரும்பாலான பகுதிகளில் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும் எப்படி பார்ப் பனியத்தால் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை பற்றியும் சிறப்பாக உரை யாற்றினார்.
இறுதியாக தாம்பரம் மாவட்ட மகளிரணி தோழர் சோமங்கலம் அ.ப.நிர்மலா நன்றியுரையாற்றி சிறப்பித்தார்.
கூட்டம் மிக எழுச்சியோடு நடைப்பெற்றது.
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டவர் களின் பெயர்கள்:
ப.முத்தையன், மா.இராசு, ரி.மீனாம்பாள், அ.ப.நிர்மலா, ச.இராஜ லட்சுமி, ச.கண்ணகி, பெ.அனுசுயா, எம்.ஆருத்ரா, அன்பழகன்,
மு.பார்த்தசாரதி, பெ.சி.ஜெய ராமன், இரா.உத்திரகுமாரன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பச்சையப்பன், அ.கருப்பைய்யா, எஸ்.ஆர்.வெங்கடேஷ், ச.அழகிரி, மா.குணசேகரன், இரா.ரவிச் சந்திரன், அருள், யுகதீஷ்வரன், சீனிவாசன், பா.குறிஞ்சி, சிவா, வரதராசன், சங்கொளி. ஆதம், பழனி, கோபால், பாலகிருஷ்ணன், சிலம்பரசன், ச.மாணிக்கவாசகன், அன்பழகன், சாமிஷ்வரன், தும்மா பிரான்சிஸ், என்.முருகன், செ.சந் திரசேகரன், தனசேகரன், சின்னா, சீனிவாசன், கண்ணன், அப்துல், கு.சோமசுந்தரம், பெ.அண்ணா துரை, ஜே.கருணாநிதி, செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.