நைனிடால்,பிப்.14– பா.ஜ.க. ஆளும் உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானிக்கு அருகே உள்ளது பன்பூல்புரா. அப்பகுதியில் முஸ் லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 2 கிமீ சுற்றளவுள்ள பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என நீதி மன்றம் மூலம் உத்தரவை பெற்று, முஸ்லிம் மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற ஆளும் பாஜக அரசு துடித்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலை யில், கடந்த வாரம் (பிப்.9) பன்பூல் புராவில் உள்ள மதரஸா மற்றும் மசூதியை இடித்து வன்முறையை கிளப் பியது பாஜக அரசு.
இந்த வன்முறையில் 6 பேர் உயி ரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர். தற்போது ஹல்த்வானியில் இணைய சேவையும் தடை செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தர வும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில், 12.2.2024 அன்று பன் பூல்புராவில் உள்ள ரயில்வே ஆக்கிரமிப்பு நிலத்தில் பிரமாண்ட காவல்நிலையம் கட்டப்படும் என மாநில பாஜக முதல மைச்சர் புஷ்கர் சிங் தாமி வன்முறையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச் சர் புஷ்கர் சிங் தாமியின் அறிவிப்பால் ஹல்த்வானியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
‘முஸ்லிம் வீடுகளை இடித்து காவல்நிலையம் கட்டப்படுமாம்’
Leave a comment