14.2.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை தலைநகர் டில்லி குலுங்கியது: டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு; 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது; 144 தடை; துணை ராணுவம் குவிப்பு; தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம் வலுப்பதால் ஒன்றிய அரசு கலக்கம்.
* தமிழ்நாடு ஆளுநர் சட்டசபையில் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்கிறது தலையங்க செய்தி.
* மோடி அரசு அறிவித்த பாரத் ரத்னா விருதுகளால் ஒரு பலனும் பாஜகவிற்கு ஏற்படாது என்கிறார் அரசியல் விமர்சகர் பர்சா வெங்கடேஸ்வர ராவ் ஜூனியர்.
* ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொன்ன மோடி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது என சித்தராமைய்யா தாக்கு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* சட்டசபையில் நீக்கப்பட்ட பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினையை காங்கிரஸ் எழுப்பியது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதல் உத்தரவாதம்’: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை நிறைவேற்றுவது எங்களின் முதல் உத்தரவாதம் என்கிறது காங்கிரஸ்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment