போபால், அக்.7 காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மத்திய பிரதேசத்தின் தார் மாவட் டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப் போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதை தாம தப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது. அதை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஆதரித்தோம்.
ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த முடியா விட்டால் இந்த மசோதாவால் பயன் என்ன? பெண்களை நீங்கள் ஒரு நகைச்சுவையாகவே பார்க் கிறீர்கள். இடஒதுக்கீடு எங்கள் உரிமை என கூறினார். பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக் கெடுப்பின்படி 84 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்த பிரியங்கா, ஆனால், அரசு பணிகளில் அவர்களது பங்களிப்பு இல்லை என்றும், இது குறித்து கேட்டால் பா.ஜனதாவினர் மவுன மாகி விடுவதாகவும் குற்றம் சாட் டினார்.