புதுடில்லி,பிப்.14- குறைந்தபட்ச ஆதரவு விலை, எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைகளை அமல் படுத்துதல், 2020இல் போராட் டத்தின்போது விவசாயிகளின் மீதான வன்முறைகளில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தேசிய தலைநகரில் போராட்டம் நடத்த டில்லியை நோக்கி பேரணியாக விரைந் துள்ளனர்.
விவசாயிகள் போராட் டத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த ராய் ஆகியோர் 2 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல் வியில் முடிந்த நிலையில், டில்லிக் குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க எல்லைகளில் சிமெண்ட் கட்டமைப்புடன் அமைக்கப் பட்ட தடுப்புகளுடன், விவசாயிகள் நுழைவைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது ஒன்றிய மோடி அரசு.
ஒன்றிய அரசின் உத்தரவு புறக்கணிப்பு
தடைகளை மீறி டில்லிக்குள் விவசாயிகள் நுழைந்தால் அவர் களை சிறையில் அடைக்க பவனா மைதானத்தையே சிறைச் சாலை யாக மாற்றும் ஏற்பாடு களை செய்யுமாறு டில்லி மாநில அர சுக்கு ஒன்றிய அரசு உத்தர விட்டது.
ஒவ்வொரு குடிமகனும் அமை தியான வழியில் போராட்டம் நடத்த அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே விவசாயிகளை கைது செய்வது தவறானது எனக் கூறி ஒன்றிய அரசின் உத்தரவை டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு நிராகரித்துள்ளது.