ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னிப் பாதை திட்டம்’ மூலம் ஏமாற்றப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்கள்!!
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி,பிப்.14- “இந்தியாவின் 1% மக்களை அதிகாரத்திலும், பொருளாதரத்திலும் உச்சத்தில் வைத்திருப்பதற்காக, மற்றவர் களை நிராகரித்து வருகிறது பா.ஜ.க,” என ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்.
இந்தியாவின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரப் பேரணி மேற்கொண்டு வருகிறார். அப்போது திரண்டிருந்த மக்களை சந்தித்து பேசிய அவர், பா.ஜ.க எவ்வாறு சமூக – பொருளாதார கேடுகளை இழைக்கிறது என புள்ளி விவரங்களோடு எளிய முறையில் விவரித்தார்.
“இந்தியாவில் 1 விழுக்காட்டின ருக்காகவே ஒன்றிய பா.ஜ.க ஆட்சி நடத்துவதாகவும், அவர் களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டிட ஏனைய 99 விழுக்காட்டு மக்களின் உரிமைகளையும், வளங் களையும் சூரையாடி பெரு முத லாளிகளுக்கு வழங்குவதாகவும் ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல் பாடுகளை ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
அதில் மிக முக்கியமாக ’அக்னிபாத்’ என்ற திட்டத்தின் மூலம் 10ஆம் வகுப்பு படித்த இளைஞர்களை பெருவாரியான எண்ணிக்கையில் சேர்க்க போவ தாக ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2012 -ஆம் ஆண்டு அறிவித்தது. இதன் மூலம் ராணுவம், கடற் படை, விமானப்படை ஆகியவற் றில் அதிக அளவில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். இது நம் பாதுகாப்புத் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் மார்தட்டிக் கொண் டது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்த வேலைவாய்ப்பு பெரும் இளைஞர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங் கப்படும் என்றும் அறிவிக்கப்பட் டது. ஆனால் இது வரை இந்த திட்டம் தொடர்பான எந்த முன் னெடுப்புகளும் இல்லை. இந்த திட்டத்தின் பெயரைச் சொல்லி அப்பாவி இளைஞர்களை ஒன்றிய பா.ஜ.க அரசு ஏமாற்றி விட்ட தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.