ஜெயங்கொண்டம்,பிப்.14- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஜெயங்கொண்டம் எழில் விடுதி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
5.2.2024 திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ், காப்பாளர் சு.மணி வண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ப.க. அமைப் பாளர் தங்கசிவமூர்த்தி, தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனை செல்வன் ஆகியோர் 2024 ஆண்டுக்கான கழக செயல்பாடுகள் குறித்தும், தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்துரையாற்றினர். அரியலூர் மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
திராவிடர் கழக செயலவை தலைவராக பணியாற்றிய வரும் பிறவி சுயமரியாதைக்காரர் என்று தன்னை பிரக டனப்படுத்திக் கொண்டவருமான பன்முக ஆற்றல் கொண்ட கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்ட சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவிற்கும், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகனின் தாயார் ஜெயலட்சுமி மறைவிற்கும் கூட்டம் ஆழ்ந்த இரங் கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
கடலூரில் நடைபெற்ற தலைமை செயற்குழு தீர் மானங்களை நிறைவேற்ற பாடுபடுவது எனவும் ஒன்றிய பாசிச பாஜக அரசை வீழ்த்துவதற்காக பந்தய குதிரை களாக பணியாற்ற வேண்டும் என்ற தமிழர் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பரப்புரைக் கூட்டங்களை நடத்திடுவதென முடிவு செய்யப்படுகிறது.
புதிய செயலவை தலைவராக தேர்வு செய்யப்பட் டுள்ள சென்னை வழக்குரைஞர் ஆவீரமர்த்தினிக்கு இந்த கலந்துரையாடல் கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது
புதிய பொறுப்பாளர்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் : பேராசிரியர் இ.வளனறிவு. மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா.மதியழகன், செயலாளர் வெ.இளவரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ.தமிழரசன், அமைப்பாளர் க.செந்தில், வழக்குரைஞர் அணி அமைப் பாளர் மு.ராஜா, ப.க. மாவட்ட தலைவர் பொறியாளர் பெ.நடராஜன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், செயலாளர் தியாக.முருகன், செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், செயலாளர் ராசா.செல்வகுமார், அரியலூர் ஆட்டோ தர்மா, அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் துரை.பிரபாகரன், செந்துறை ராஜேந் திரன், சேடக்குடிக்காடு மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானதோழர்கள் பங்கேற்றனர்.