பிஜேபி ஆதரவு மகாராட்டிரா ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல்!

viduthalai
2 Min Read

மும்பை, பிப். 13- மகாராட்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து குறுக்கு வழியில் கூட்டணி ஆட்சி யை நடத்தி வருகிறது பாஜக. பாஜக வின் கூட்டணி ஆட்சி அமைந்த காலத்தில் இருந்தே மகாராட் டிராவில் சட்டம் ஒழுங்கு உருக் குலைந்துள்ளது. மத வன் முறை கள், துப்பாக்கிக் கலாச்சாரம் மூலம் அரசியல் கட்சித் தலை வர்கள் மீது கொலைவெறித் தாக் குதல் என மாநிலம் முழு வதும் நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின் றன.
2 வாரத்திற்கு முன்பு தானே மாவட்ட காவல் நிலையத்திற் குள் சிவசேனா (ஷிண்டே) தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது பாஜக சட்டமன்ற உறுப் பினர் கணபத் கெய்க்வாட் துப் பாக்கிச்சூடு நடத்தினார். இச் சம்பவத்தில் மகேஷ் கெய்க்வாட் ஆபத்தான கட்டத்தில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். இந் நிலையில், 8.2.2024 அன்று மும்பை யின் தஹிசார் பகுதியில் சிவ சேனா (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கோசல் கரின் மகனும், மேனாள் உள் ளாட்சி மன்ற உறுப்பினருமான அபிஷேக் கோசால்கர் முகநூல் நேரலையின் பொழுதே துப்பாக்கி யால் சுட்டுக்கொல்லப்பட்டார். அபிஷேக்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழிலதிபர் மாரிஸ் நொரோன்ஹா தன் னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர் துப்பாக்கிச்சூடு சம்ப வங்களால் அரசியல் கட்சித் தலை வர்களுக்கு பாதுகாப்பு இல்லா சூழ்நிலையில், சிவசேனா (உத் தவ்) தலைவர் உத்தவ் தாக் கரே செய்தியாளர்கள் சந்திப் பில், “மகாராட்டிராவில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராட்டிரா அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி புதிய தேர்தல் நடத் தப்பட வேண்டும்” என ஒன்றிய அர சிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவின் வகுப்புவாத அரசியலை தனது விமர்சனங்கள் மூலம் தோலுரித்து வரும் மகா ராட்டிராவைச் சேர்ந்த பத்திரி கையாளர் நிகில் வாக்லே, சமீ பத்தில் “பாஜக ஆட்சி நடக்கும் சூழலில் எல்.கே.அத்வானிக்கு பாரத் ரத்னா வழங்குவதை எப்படி ஏற்க முடி யும்?” என கேள்வி எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இந் நிலையில், 9.2.2024 அன்று இரவு நிகில் வாக்லே தனது காரில் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று கொண் டிருந்தார். அப்போது அவரது காரை குண்டர்கள் வழிமறித்து, கார் கண்ணாடிகளை உடைத் தது மட்டுமல்லாமல், காரை சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் தடுத்து, காரின் மேல்பகுதியில் மையை ஊற்றினர்.
தகவலறிந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) கட்சியினர் தாக்குதல் நடத்திய பாஜகவி னரை அடித்து துரத்தி, நிகில் வாக்லேவை மீட்டனர். “இந்தியா” கூட்டணியினர் வரவில்லை என்றால் நிகில் வாக்லேவை பாஜக குண்டர்கள் அடித்தே கொன்றிருப்பார்கள்.
இது குறித்து நிகில் வாக்லே, ’’என்னை தாக்கியவர்களை நான் மன்னிக் கிறேன். இதற்கு முன்பு நான் 6 முறை தாக்கப் பட்டேன். இது 7 ஆவது முறை யாகும்’’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *