சென்னை, பிப். 13- சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை என்றும், பழைய பேருந்துகளைத்தான் இயக்கி கொண் டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனி சாமி, திமுகவின் ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டி உள்ளார்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடந்த ஜன.20ஆ-ம் தேதிதான் 100 புதிய பேருந்துகளை தொடங்கி வைத் தார். அதைத்தொடர்ந்து 99 புதிய பேருந்துகள் என புதிதாக 199 பேருந் துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதையடுத்து 4,000 பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, நடைமுறை முடிந்து விரைவில் அந்தப் பேருந்துகள் வாங்கப் பட உள்ளன.
கரோனா காலத்தில் தொழிற் சாலைகள் இயங்காத காரணத்தினால் புதிய பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் கரோனா காலம் முடிந்த பிறகு புதிய பேருந்துகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு அரசின் நிதியில் 2 ஆயிரம் பேருந்துகளையும், ஜெர்மன் வங்கி நிதி உதவியில் இருந்து 2 ஆயிரம் பேருந்துகளையும் வாங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 100 மின் சார பேருந்துகளும் வாங்கப்பட உள் ளன.
எனவே குற்றம்சாட்டுவதற்கு முன் பாக அவருடைய காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். அதேபோல ஆசியா விலே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
பழனிசாமி, வர தயாராக இருந்தால் நானும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் அவரை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று என்னென்ன வசதி கள் உள்ளன என்பதைக் காட்டத் தயாராக இருக்கிறோம்.
முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக் கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் உள்ள அவர்களது பணிமனைகளில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கிக் கொள்ளலாம் என்றுதான் உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
இதை வைத்துக்கொண்டு கோயம் பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்கலாம் என்று ஒரு தவறான கருத்து சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு நான்காயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

Leave a Comment