சென்னை,பிப்.13- சட்டப் பேரவையின் ஆண்டு முதல்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையு டன் நேற்று (12.2.2024) தொடங் கியது. இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிப்.13-ஆம் தேதி பேரவையில், மேனாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக் கப்படும்.
அதைத்தொடர்ந்து, ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். தொடர்ந்து, 14ஆம் தேதியும் விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும். 15-ஆம் தேதி ஆளு நர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலு ரையை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அளிப்பார். அத்துடன், பேரவை கூட்டத்தொடர் முடிந் துவிடும்.
மீண்டும் பிப்.19ஆ-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையையும், 20ஆ-ம் தேதி வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக் கல் செய்வார்கள்.
அதைத்தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கும். பிப்.22-ஆம் தேதி நிதி மற்றும் வேளாண் அமைச் சர்கள் பதிலுரை அளிப்பார்கள்.
சட்டப்பேரவைக்குள் ஆளு நர் வந்ததும் பேரவை விதிகள் படி, தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளு நர் உரை மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும்.
சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டம் ஆளுநர் உரையு டன் தொடங்குவதுதான் மரபு. பல மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை. தெலங் கானாவில், சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருந்தபோது, ஆளுநரான தமிழிசை சவுந்தர ராஜனை அழைக்கவில்லை. தமிழ் நாட்டில் சட்டத்தையும், மாண் பையும் மதிக்கிறோம்.
கொள்கை, கருத்து வேறு பாடுகள் இருந்தாலும், ஆளு நரைஅழைக்க வேண்டும் என்ற மாண்பை தமிழ்நாடு முதல மைச்சர் கடைப்பிடிக்கிறார். எழுதிக் கொடுத்த உரை, ஆளு நரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர்தான் அச்சடிக்கப்பட் டுள்ளது.
நாகரிகமான உரையைத்தான் அளித்துள்ளோம். ஆனால், ஆளுநர் முதல் பக்கத்தின்உரையை வாசித்துவிட்டு, இறுதியாக கடைசி பக்கத்துடன் நிறுத்தி விட்டார். அதன்பின் தன் கருத்தை கூறுகிறார்.
அரசமைப்புச் சட்டப்படி, மரபுப்படி பேரவை நடை பெறுகிறது. இதில் மரபை, விதிகளை மாற்றி விருப்பத்தை தெரிவிப்பது முறையல்ல. அதே போல், அவைமாண்புப்படி, தேசிய கீதம் பாடும்வரையாவது இருந்திருக்க வேண்டும். ஆளு நரின் எண்ணம் என்பது முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்கிறார்.
ஆனால், தமிழ்நாடு முழுவ துமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும். இந்த நடைமுறையையே நாம் பின் பற்றி வருகிறோம். இந்த நாட் டில் தமிழ்நாட்டைவிட சிறந்த தேசப்பற்று, சுதந்திரப் போராட்ட தியாகிகள் எங்கிருக்கிறார்கள்?
ஆளுநரை நாங்கள் நேரில் சென்று அழைக்கும்போது, அரசு தயாரித்து அளித்த உரை குறித்துஅவர் எந்த தகவலும் அளிக்கவில்லை.
அரசால் தயாரித்து அளிக் கப்பட்ட உரைக்கு அவர் ஒப்பு தல் அளித்துள்ளார். எதையா வது மாற்ற வேண்டும் என்றால் முன்கூட்டியே தெரிவித்திருக் கலாம். அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்க வேண்டும் என்று கூறி, நீக்காததால் இதை மட்டும் படிக்கிறேன் என்று கூறியிருக்கலாம். எழுதியிருப்பது ஒன்றுமே எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது என்ன நியாயம்.
தேசிய கீதம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் கடிதம் அளித்துள்ளார். அப்போது பேரவை விதிகளைக் குறிப்பிட்டு, இப்படித்தான் செயல்படுவோம் என்று பதில் அளித்துள்ளோம். தமிழ்நாட்டின் மரபை ஏன் மீற வேண்டும் என்றுதான் கேட்கி றோம். தமிழ்நாட்டு மக்களுக்கு பிஎம் கேர் நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடியை ஆளுநர் வாங்கித்தர வேண்டும் என்ற எனது எண்ணத்தைத்தான் அவையில் தெரிவித்தேன். இவ் வாறு அவர் கூறினார்.
பிப்ரவரி 15 வரை ஆளுநர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 19 முதல் 22 வரை நிதிநிலை அறிக்கை குறித்த கூட்டத்தொடர் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தகவல்
Leave a Comment