விதவைகள் எண்ணிக்கையில்
உலகில் இந்தியாவுக்கே முதலிடமாம்!!
புதுடில்லி, பிப்..13 – உலகிலேயே அதிக விதவைகள் வாழும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
2023 மார்ச் 7 தகவலின்படி இந்தி யாவில் 55 மில்லியனுக்கும் (சுமார் 5 கோடியே 50 லட்சம்) அதிகமான விதவைகள் வாழ்கின்றனர் என தெரியவந்துள்ளது. கணவனை இழந்த பிறகு, பாகுபாடு, களங்கம், பொரு ளாதாரப் பிரச்சினைகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாரம்பரிய நடை முறைகள் போன்ற பிரச்சினைகளை வாழ்நாள் முழுவதும் விதவைகள் எதிர்கொள்கின்றனர். “உலகளவில் மூன்று விதவைகளில் ஒருவர், இந்தியா அல்லது சீனாவில் வாழ்கின்றனர். 46 மில்லியன் விதவைகளைக் கொண்ட இந்தியா, சீனாவை (44.6 மில்லியன்) பின்னுக்கு தள்ளி, அதிக எண்ணிக்கையிலான விதவைகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது” என்று 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று, ‘உலகப் பொருளாதார மன்றம்’(World Economic Forum) தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 40 மில்லியன் விதவைகள் இருப்பதாக மதிப் பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெண் மக்கள் தொகை யில் இது 10 சதவிகிதம் என்று ‘மாடர்ன் விண்டோஸ் கிளப்’(Modern Windows clup) இணையதளமும் கூறியிருந்தது.
இந்நிலையில்தான், கடைசியாக 2023 மார்ச் 7 அன்று புள்ளி விவரம் வெளியிட்ட ‘தி ஹூமானிட்டி’ (The Humanity) இணையதளமும் “இந்தி யாவில் 55 மில்லியனுக்கும் அதிக மான விதவைகள் வாழ்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், “கணவனை இழப்பதால் ஏற்படும் துக்கம் மற்றும் நிதி இழப்பைக் கையாளும்போது, இந்தப் பெண்களில் பலர், ‘சமூக மரம்’ என்று விவரிக்கப்படும் மரபுகளுக்கு இணங்க அழுத்தம் கொடுக்கப்படு கிறார்கள்.
திருவிழாக்கள் மற்றும் கொண்டாட் டங்களில் இருந்து விலக்கப்பட்டு, ஒரு ஆண்டு அல்லது அதற்கும் மேலாக வீடு களில் முடக்கி வைக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் களங்கம் கொண் டவையாக உள்ளன. சில தொலை தூர கிராமங்களில், விதவைகள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தங்கு மிடங்களுக்கு (உ.பி. மாநி லத்தி லுள்ள பிருந்தாவனம் போன்ற இடங் களுக்கு) அனுப்பப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளது. அய்க்கிய நாடுகள் அவை யின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 258 மில்லியன் விதவை பெண்கள் உள்ளனர்.