12.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜக ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை விதைக்கிறது என ராகுல் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்து வோம், ராகுல் உறுதி. அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு பணியமர்த்த மறுக்கப்பட்ட 1.5 லட்சம் விண்ணப்பதாரர்களை வேலைக்கு அமர்த்துவதாகவும், இழப்பீடு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை ‘உரிமை களை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் அறிவித்தது திமுக. பிப்ரவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகள் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
தி இந்து:
* 17ஆவது மக்களவையில் சராசரி ஆண்டின் அமர்வு நாட்கள் 135இல் இருந்து 55 ஆக குறைந்துள்ளது.
தி டெலிகிராப்:
* அசாமில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படுவதற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. அகில் கோகோய் அழைப்பு விடுத்துள்ளார்.
* அந்தர் பல்டி: தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று பேசிய ஒரு நிமிடம் கழித்து நாங்கள் 370 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப் போம் என மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியினரான ஜாபுவாவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேச்சு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment