தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவி லில் தொடங்கப்பட்ட பெரியார் புத்தக நிலையத்தில் இயக்க நூல்கள் விற்பனை பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கிராமப்புற ஊராட்சி நூலகங்கள், படிப்பகங்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்களை பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் நூல்களை மக்களிடம் சேர்க்கும் முயற்சி யில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.48,000க்கு இயக்க நூல்கள் விற்பனையாகின.
நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.48,000க்கு இயக்க நூல்கள் விற்பனை
Leave a Comment