பிஜேபி தலைவர் நட்டாவை சந்திக்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மறுப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 11- பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (11.2.2024) பிற்பகல் சென்னை வருகிறார். காட்டாங்கொளத் தூரில் உள்ள ஓட்டலில் பா.ஜ. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்க உள்ளார். தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர் களையும் சந்திக்க ஜே.பி.நட்டா திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்புக்கு மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல் வம், அ.ம.மு.க. பொதுச் செய லாளர் டி.டி.வி.தினகரன், த.மா .கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அய்.ஜே.கே. நிறுவநர் பாரிவேந்தர் ஆகிய 5 பேர் மட்டுமே ஜே.பி.நட் டாவை சம்மதம் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க. கூட்ட ணியில் இருந்து வெளியேறி விட்டது. பெரிய கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஜே.பி. நட்டா சந்திப்பை புறக் கணித்து உள்ளனர். அது மட்டுமல்லாமல் கடந்த முறை கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சந் திப்பை புறக்கணிக்க உள்ளார் எனத் தெரிகிறது.
பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் தலைவர்களுடன் தமிழ்நாடு பா.ஜ.தலைவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அதற்கு 3 கட்சிகளின் தலைவர்களும் பிடி கொடுக்கவில்லை. அவர் கள் சந்திப்பதை தவிர்த்து விட் டனர்.

எதிர்பார்த்த பெரிய கட்சித் தலைவர்கள் வராததால், சிறிய கட்சிகளின் தலைவர்கள் மட்டும் ஜே.பி.நட்டாவை சந் திப்பது பாஜ கூட்டணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டு மல்லாமல் 5 பேர் மட்டுமே சந்திக்க வாய்ப்பு உருவாகியுள் ளதைப் பார்த்து ஜே.பி.நட்டா வும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதனால் அவர் களை மட்டுமே சந்தித்துப் பேசுகிறார்.

மேலும், சென்னை வரும் ஜே.பி.நட்டா இன்று மாலை வடசென்னை தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட் டத்திலும் பங்கேற்று பேசு கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *