நாடாளுமன்றத்தில் பிஜேபியின் நிதிநிலை அறிக்கை: ‘பொய்கள்’ அடங்கிய வெள்ளை அறிக்கை – காங்கிரஸ் கடும் தாக்கு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,பிப்.11- நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை ஒப்பீடு வெள்ளை அறிக்கை மோடி அரசின் “பொய்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை” என காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற வளா கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய் ராம் ரமேஷ், “நிதியமைச்சர் தாக்கல் செய்தது உண்மையான வெள்ளை அறிக்கை இல்லை. மோடி அரசின் “பொய்கள் அடங்கிய பொய் வெள்ளை அறிக்கை.” இந்த வெள்ளை அறிக்கைக்கு பதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே வெளியிட்ட கருப்பு அறிக்கை யில் உள்ளது.
கார்கேவின் கருப்பு அறிக்கை நிதிய மைச்சர் சீதாராமன் அறிக்கைமீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக். பணமதிப்பிழப்பு, அதிகரிக்கும் வேலையில்லாத் திண் டாட்டம், பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து வெள்ளை அறிக் கையில் எதுவுமில்லை. சீனாவுடனான பிரச்சினை, எல்லை பதற்றங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் கோருகிறது.
இதேபோல் மணிப்பூர் விவகாரம், முன்பு நடந்த பணமதிப்பிழப்பு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய கோரினோம். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ள வேலையில்லா திண்டாட்டம் பற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம். ஆனால் அதை செய்யாமல் மோடி மவுனம் காக்கிறார். வெள்ளை அறிக்கை என்பது ஒரு நிகழ்வு. ஏற்கெனவே எல்.கே.அத்வானி சொன்னது போல் மோடி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே.
விவசாயிகள், பெண்கள், இளைஞர் களுக்கு எதிரான அநீதிகள், ஊழல் விவகாரங்களில் பாஜக அரசு மவுனமாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுக்கு விற்கப்படுகிறது. அனைத் துமே தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *