அரூர்,பிப்.10- அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை அரூர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
மேனாள் அமைச்சர் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி. பழனியப்பன் தொடங்கி வைத்தார்.
துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முதல் வகுப்பை தொடங்கினார்.
தொடக்க நிகழ்விற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையேற்றார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ் திலீபன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவார் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆசிரியர் அன்பரசு வெண்ணிலா, பொதுக்குழு உறுப்பினர் வேங்கை தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் த.சிவாஜி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்
பகுத்தறிவாளர் கழக மாநில களத்துறை செயலாளர் இயக்குநர் மாரி.கருணாநிதி அறிமுக உரையாற்றினார் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சா.ராஜேந்திரன், திமுக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் மெடிக்கல் சத்யமூர்த்தி, அண்ணல் அம்பேத்கர் அறிவகம் அறக்கட்டளை செயலாளர் அம்பேத்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியார் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
“பார்ப்பனர் பண்பாட்டுப் படை எடுப்புகள்” என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி. பூங்குன்றன் அவர்கள் முதல் வகுப்பை நடத்தினார்.
தொடர்ந்து முனைவர் துரை.சந்திரசேகரன், ஆசிரியர் அழகிரிசாமி, முனைவர் அதிரடி. அன்பழகன், வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார், எழுத்தாளர் வி.சி.வில்வம், ஈட்டி கணேசன் ஆகியோர் வகுப்பை எடுத்து வருகின்றனர்.
கல்லூரி பள்ளி மாணவர்கள் 272 நபர்களும் கழகத் தோழர்களும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.