மக்கள் தொகைப் பெருக்கம்: நிர்மலா சீதாராமனின் தவறான தகவல்!

viduthalai
2 Min Read

கேள்வி: இந்தியாவின் மக்கள் தொகை வேகமாகப் பெருகி வருவதாகவும், அதைச் சமாளிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே!

பதில்: பட்ஜெட் உரையில் இவ் வாறு நிர்மலா சீதாராமன் கூறியிருக் கிறார். பிரதமரும் பிஜேபி தலைவர் களும் இதையே பேசி வருகிறார்கள்.
இது ஒரு பொய் என்று நிரூபிக்க உச்சநீதி மன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் மனுவே ஆதாரம். அந்த மனுவில் என்ன கூறப்பட்டிருக்கிறது என பரகால பிரபாகர் தன் ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ என்கிற நூலில் இவ்வாறு விளக்குகிறார்:

“நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப் படுத்த அனைவரும் இரண்டு குழந்தைகளையே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற விதியை அமலாக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் பொது நல வழக்கில் ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் மனு, ’இந்தியாவின் மக்கள் தொகை கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டை திட்டவட்டமாக எதிர்க்கிறது,’ என்றும், ‘நாட்டின் கருவுறு விகிதம் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது’ என்றும் கூறுகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக் கையிலான குழந்தைகளையே பெற் றுக் கொள்ள வேண்டும் என கட் டாயப்படுத்துவது எதிர் விளைவு களை உருவாக்கி, நாட்டின் மக்கள் தொகை அமைப்பைச் சிதைத்து விடும் என்று பன்னாட்டு அனுபவம் காட்டுவதாகவும் அந்த மனு குறிப் பிடுகிறது.

மாதிரிப் பதிவு அமைப்பின் கணக்குப் படி இந்தியாவின் மொத்த கருவுறு விகிதம் ‘கணிசமாகக்’ குறைந்து 2.2 என்கிற அளவை எட்டியிருப்ப தாக்வும் அரசு தன் மனுவில் சுட்டிக் காட்டியிருக்கிறது.”

கருவுறு விகிதம் (fertility rate) என்பது சராசரியாக ஒரு இந்தியப் பெண் பெற்றுக் கொள்ளும் குழந்தை களின் எண்ணிக்கை.
இப்போதிருக்கும் 2.12 என்கிற விகிதம் மக்கள் தொகையை அப் படியே பெருகாமல் வைத்திருக்கும். இந்த அளவு கூட 2011இல் எடுக்கப் பட்ட சென்சஸ் அடிப்படையி லானது. 2021இல் எடுக்க வேண்டிய சென்சஸை அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது. அப்படி எடுத்தால் கருவுறு விகிதம் இன்னும் குறைந்திருக்கும்.
அது பிஜேபியின் மக்கள் தொகை அரசியலுக்கு உலை வைத்து விடும்.
கருவுறு விகிதத்தில் இந்துக்களுக் கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியும் குறைந்து ஏறக் குறைய சமநிலைக்கு வந்து விட்டது என்பது தான் உண்மை!

– ‘ஃப்ரண்ட் லைன்’
மேனாள் ஆசிரியர் விஜய்சங்கர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *