புதுடில்லி, பிப். 2- காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரண்யா அய்யர் டில்லியின் ஜாங்புரா பகு தியில் வசித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி சுரண்யா அய்யர் தனது முகநூல் பக்கத்தில்,
“ராமன் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரி விக்கவும் முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்கவும் விர தம் மேற்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
ராமன் கோயில் ஜன வரி 22-ஆம் தேதி திறக்கப் பட்டது. அதற்கு 2 நாள் முன்பு இந்தப் பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜாங்புரா குடியிருப்போர் நலச்சங்கம் மணி சங்கர் அய்யர் மற்றும் சுரண்யா அய்யருக்கு ஒரு தாக்கீது அனுப்பி உள்ளது. அதில் “குடியிருப்புவாசிகளின் மத உணர்வுகளுக்கு எதி ராக அமைதியை சீர்கு லைக்கும் வகையில் ஒரு வர் கருத்து தெரிவிப்பதை ஏற்க முடியாது.
ராமன் கோயிலுக்கு எதிராக நீங்கள் செய்த செயல் சரிதான் என கரு தினால். இந்த குடியிருப்பை காலி செய்து விட்டு. இது போன்ற வெறுப்புப் பேச்சை சகித் துக் கொள் ளும் மக்கள் வசிக்கும் பகுதியில் குடி யேறுங்கள். உச்சநீதிமன் றத்தின் தீர்ப் புக்குப் பிறகு ராமன் கோயில் கட்டப் படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.
இதுதான் புதிய இந்தியா.. ராமன் கோயிலுக்கு எதிர்ப்பால் வீட்டை காலி செய்ய உத்தரவாம்
Leave a Comment