2.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மோடி அரசின் இடைக்கால பட்ஜெட்டில், மாநிலங் களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எதுவும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டிரக் ஓ பிரைன் கண்டனம்.
* ஹேமந்த் சோரனை கைது செய்தது போல், என்னை கைது செய்து சிறையில் அடைத்தால், ஓட்டை போட்டு வெளியே வந்து போராடுவேன் என மம்தா ஆவேசம். பொதுத் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்ய மோடி அரசு திட்டம் என தாக்கு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராகுல் காந்தியின் நீதிப் பயணத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்றது.
தி இந்து:
* ஹேமந்த் சோரன் பதவி விலகலைத் தொடர்ந்து ஜே.எம்.எம். சார்பில் சம்பாய் சோரன் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை என தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்ச்னம்.
– குடந்தை கருணாகவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment