பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் புதியதாக இணைந்தது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, பிப்.1- மகாராட்டிரா மாநிலத்தில் பிரகாஷ் அம் பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியும் ‘இந்தியா’ கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன.
இக்கூட்டணியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் மகாராட்டிரா மாநிலத் தைச் சேர்ந்த வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி புதிதாக இணைந்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும், டாக்டர் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘வஞ்சித் பகுஜன் அகாதி, ‘இந்தியா’ கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத ஆகிய கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மகாராட்டிரா மாநில இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை (2-2-2024)நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *