டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு

viduthalai
2 Min Read

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித் துள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது.
தேர்வு விவரங்கள்:
கிராம நிர்வாக அலுவலர்கள், ஜுனியர் 8 துறைகளில் காலியாக உள்ள அசிஸ்டண்ட், 8 துறைகளில் காலியாக உள்ள டைபிஸ்ட்,தனி உதவியாளர், பில் கலெக்டர், வன பாதுகாப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் காலியாக 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
தேர்வானது ஜுன் மாதம் 9ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாளானது 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்படும். அதில் பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும். பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதாவது 200 கேள்விகள் மூலம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது.
எச்சரிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து ஆட்சேர்ப்புகளும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானவை. நியாயமற்ற வழிகளில் வேலைகளைப் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து முகவர்கள் ஏமாற்றலாம். அத்தகைய நேர்மையற்ற கூறுகளுடன் எந்த விதமான பரிவர்த்தனைகளிலும் யாரேனும் பணத்தை இழந்தால் அதற்கு டிஎன்பிஎஸ்சி அமைப்பு பொறுப்பேற்காது
இணைய வழி விண்ணப்பத்தில் இடம்பெறும் உரிமைகோரல்களுக்கு (கிளெய்ம்) விண்ணப்பதாரர்கள் மட்டுமே பொறுப்பு. ஆட்சேர்ப்புக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவறுகளுக்கு இணைய மய்யங்கள் மற்றும் பொது சேவை மய்யங்கள் போன்ற சேவை வழங்குனர்களை குறை கூற முடியாது. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட இணைய தள விண்ணப்பத்தை இறுதியாகச் சமர்ப்பிக்கும் முன் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் எச்சரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *