மயிலாடுதுறை, ஜன.31- மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி காந்தியார் நினைவு நாளான நேற்று (30.1.2024) மயிலாடுதுறையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை டி.இ.எல்.சி சர்ச் முன்பு உள்ள காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளர் நிவேதா சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், காங்கிரஸ், சிபிஎம், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, சிபிஅய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, தேசிய லீக், தமுமுக, மஜக, அனைத்து இஸ்லாமியர் கூட்டமைப்பு, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர். பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலை பகுதியில் முடிவடைந்து, அங்கு பாசிசத்துக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக உயர்மட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் ஆகியோர் பேசினர். முடிவில், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மத நல்லிணக்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மயிலாடுதுறையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி
Leave a Comment