சென்னை, ஜன. 31 சங்கிகள் என் றால் மதச்சார்பின்மைக்கு எதிரான வர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பவர்கள் என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.
காந்தியாரின் நினைவு நாளினை முன்னிட்டு, நேற்று (30-1-2024) சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து, மத வெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர் க. உதயகுமார் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பத்திரிகையாளர் என்.ராம், பேரா.கல் பனா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், சென்னை மக்கள் ஒற் றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், இந்திய ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய என். ராம், “விடுதலைப் போராட்டத்தில் காந்தியாரின் பங்கு மகத்தானது. மக்களை ஒன்று சேர்ப் பதில், அவரின் தலைசிறந்த பங் களிப்பை சிலர் குறைத்து பேசுகின் றனர். அத்தகையோர் வரலாறு அறி யாதவர்கள். அவர்கள் வரலாற்றை மாற்றி தவறான தகவலை பரப்பு கின்றனர்” என்று குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த என்.ராம், “சங்கி என்பவர்கள் மதச் சார்பின்மைக்கு எதிராக, இந்தி யாவை இந்து நாடாக மாற்ற முயற் சிக்கும் பாதையில் இருப்பவர்கள் என்று பொருள். ஆர்எஸ்எஸ் அதனுடன் சேர்ந்த விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள்தான் சங்கி என்று அழைக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்த என்.ராம், “இவர்கள்தான் பாபர் மசூதியை இடித்தார்கள். சங்கி என்றால் யார் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள். அதேநேரம் சங்கி என்றால் ரஜினி காந்திற்கு தனி கருத்து இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டார்.