கருநாடகத்தில் மதக் கலவரத்தை தூண்ட அனுமன் கொடியை ஏற்றுவதா? முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்

viduthalai
2 Min Read

பெங்களூரு, ஜன. 30- கருநாடகாவில் மண்டியா அருகே 108 அடி உயரத் தில் ஏற்றப்பட்ட அனு மன் கொடியை அரசு அதிகாரிகள் அகற்றிய தால் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட் சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட் டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமன் கோயில் திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு கருநா டக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் 108 அடி உயர கம்பத்தை நட்டு அதில் அனுமன் கொடி ஏற்றினர். கெரகோடு கிராம பஞ்சாயத்து நிர் வாகத்தின் அனுமதியைப் பெறாமல் அனுமன் கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த சிலர், “அரசு இடத்தில் தேசியக் கொடி, கன்னட கொடி தவிர வேறு கொடிகளை ஏற்ற அனுமதி இல்லை. எனவே அதனை அகற்ற வேண்டும்” என‌ கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர் மக்கள் மண் டியா மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடந்த ஞாயிற் றுக்கிழமை பொது இடத் தில் அனுமதி இல்லாமல் ஏற்றப்பட்ட அனுமன் கொடியை அகற்றினர். மேலும் அந்த 108 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர்.

அப்போது பாஜக, மஜத, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் போராட் டம் ந‌டத்தினர். மேலும் அதிகாரிகளை முற்றுகை யிட்டு வாக்குவாதம் செய் தனர். இதனால் காவல் துறையினர் லேசான தடி யடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடு பட்ட 50-க்கும் மேற்பட் டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து 28.1.2024 அன்று கிராமத் தில் இருந்த அனைத்து கடைகளையும் அடைத்து, வீடுகளில் அனுமன் கொடி ஏற்றி எதிர்ப்பை காட்டினர். கெரகோடு கிராமத்தில் பாஜக, மஜத, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளதால் அங்கு பதற்ற மான சூழல் நிலவுகிறது. இதனால் நேற்று (29.1.2024) காலை 10 மணி முதல் இன்று காலை6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருநாடக பாஜக, மஜத தலைவர்கள் அங்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தை கண் டித்து கருநாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து முதல மைச்சர் சித்தராமையா கூறுகையில், “கிராம பஞ்சாயத்தின் அனுமதி பெறா மல் எந்த கொடியும் வைக்க முடியாது. இதே நபர்கள் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தின் முன்னால் அனுமன் கொடியை ஏற்றினால் அனுமதிக்க முடியுமா? இந்த சம்பவத்தின் பின் னணியில் பாஜக, மஜத வினர் இருக்கின்றனர். கிராம மக்களை தூண்டி விட்டு மத அரசியல் செய் கின்றனர். சட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க‌ப்படும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *