ஒரு சுயநலக் கூட்டம் உழைக்காமலே உண்டு சுக வாழ்வு வாழவே நம் மக்கள் இவ்வளவு மூடநம்பிக்கை களையும் ஒப்புக் கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இதை மக்கள் உணர வேண்டாமா? நன்கு சிந்தித்துப் பார்க்கத் தெளிவு வேண்டாமா? சமுதாயத்தில் பார்ப்பான் என்றும், பஞ்சமன் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம் தானா? இதற்குக் கடவுள்தான் பொறுப்பாளி என்று கூறப்படுமேயானால் அக்கடவுளைப் பஞ்சமனோ, சூத்திரனோ வணங்கலாமா? வழிபாடு செய்யலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’