கறம்பக்குடி, அக். 12- அறந் தாங்கி கழக மாவட்டம் கறம்பக்குடியில் செப் 25 தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா முத்தமிழ் அறி ஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வைக்கம் நூற் றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களை உள்ள டக்கி மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
பொதுக் கூட்டத் திற்கு மாவட்ட செயலா ளர் கறம்பக்குடி முத்து தலைமையில் மாவட்ட தலைவர் க மாரிமுத்து பெரியார் பெருந்தொண் டர் குப்பக்குடி இளங்கோ ப க மாவட்ட செயலா ளர் வீரையா மாநில மாண வர் கழக செயலாளர் செந்தூர்பாண்டி யன் ஆகியோர் முன்னிலை யில் கழக பேச்சாளர் மாங்காடு சுப.மணியர சன் துவக்க உரை நிகழ்த் தினார்.
தொடர்ந்து கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் அனைத்து பகுதி களிலும் நகர் முழுவதும் ஒலி பெருக்கி ஆங்காங்கே மக்கள் நின்று கொண்டு கூட்டத்தை கைதட்டி வரவேற்றார்கள். மாவட்ட மாண வர் அணி தலைவர் பிரவீன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.