சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து

மும்பை, ஜன.28- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் மு.அப்பாவு பேசினார்.

அகில இந்திய சபாநாயகர்களின் 84ஆவது மாநாடு மராட்டிய மாநிலம், மும்பையில் உள்ள மராட்டிய விதான் சபாவில் நேற்று (27.1.2024) தொடங் கியது.
இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரும் பங்கேற்றனர்.
மாநாட்டில் சபாநாயகர் மு.அப் பாவு பேசியதாவது,

2006-2011ஆம் ஆண்டு தமிழ்நாட் டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளி யேற்றப்பட்டதை அறிந்து அவர்களை மீண்டும் அவைக்கு அழைத்து வந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள செய்தார். இதுதான் ஜன நாயக மாண்பு.
தமிழ்நாட்டில் தற்போது 132 ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் 101 பேரும் உள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 107 மணி நேரம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 78 மணிநேரம்தான் பேச அனுமதிக்கப்பட் டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய கருத்துகள் அவையில் அதிகளவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் எண்ணமாகும்.

கால அவகாசம்…

நாடாளுமன்றத்தின் இரு அவை களால் நிறைவேற்றப்படுகின்ற சட்ட முன்வடிவுகள் அனைத்திற்கும் குடிய ரசுத் தலைவர் ஓரிரு நாட்களில் அனுமதி அளித்து விடுகிறார். ஆனால், பல மாநிலங்களில் ஆளுநர்களால் பல சட்டமுன்வடிவுகள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டு, உச்ச நீதிமன்றம்வரை பல மாநில அரசுகள் சென்றுள்ளன.
இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நான், சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில், ஆளுநர் கள், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு கால அவகாசம் முறையாக நிர்ணயிக்கப்பட்ட வேண் டும்” என்று வலியுறுத்தினேன். அதையே தற்போதும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
கேலிக்கூத்து

அதோடு கடந்த ஆண்டு தொடக் கத்தில் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் பல பகுதிகளைச் சேர்த்தும், நீக்கியும் வாசித்து தமிழ்நாடு சட்டமன்ற மாண்பை இழிவுபடுத்தியதை நினைவு கூர விரும்புகிறேன்.
தற்போது கேரள மாநில ஆளுநர் தனது உரையின் கடைசி பக்கத்தை மட்டும் அவையில் வாசித்து, ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஜனநாயக மாண்பை, ஜனநாயக முறையில், நாட்டு மக்களும், ஆளும் கட்சிகளும் பின்பற்றினால்தான் நம் முடைய நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்.
-இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *