திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்திட மாவட்ட இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

viduthalai
2 Min Read

திருநெல்வேலி, ஜன. 28- திருநெல் வேலி மாவட்ட இளைஞரணி ,மாணவர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் 26.1.2024 அன்று மாலை வீரவநல்லூர் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாவட்டத்தலைவர் ச.இரா சேந்திரன் தலைமை வகித்தார். பெரியார்பிஞ்சு த.முகிலன் திருக்குறள் கூறினார். விடு தலை, உண்மை,பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ் களின் சிறப்பினை விளக்கியும், வாசிக்கவேண்டிய அவசி யத்தை வலியுறுத்தியும் மாவட் டச் செயலாளர் இரா.வேல் முருகன் உரையாற்றினார்.
கழக காப்பாளர் இரா.காசி, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேக ரன், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந் தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செய லாளர் அ.சவுந்திரபாண்டியன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் சு.இனியன், மாவட்ட இளைஞரணி தலை வர் வீரபாண்டிய கட்டபொம் மன், மாவட்ட மாணவர்கழக தலைவர் செ.சூரியா, சேரன் மகாதேவி ஒன்றியத் தலைவர் கோ.செல்வசந்திரசேகர், வீரவநல்லூர் கழகத்தலைவர் மா.கருணாநிதி, அயன்சிங்கம் பட்டி எஸ்.பிரபாகரன், மகா ராசா, பிரம்மநாயகம், புரட்சி கர இளைஞரணி முன்னணி பொறுப்பாளர் மணிவண் ணன், தச்சநல்லூர் சிறீநாத் ஆகியோர் கருத்துரை வழங் கினார்கள். கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மறை வுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. தந்தைபெரியாரின் இறுதிமுழக்கமும் -தமிழர் தலைவர் அளித்த உறுதி முழக் கமும் என்ற தலைப்பில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வீரவ நல்லூரில் கூட்டம் நடத்துவது எனவும், கிளைக்கழகங்கள் தோறும் தொடர்கூட்டம் நடத்துவது எனவும், 1.2.2024 அன்று சென்னையில் நடை பெறும் மாணவர் கூட்டமைப்பு பேரணி, மாலை பெரியார் திடலில் நடைபெறும் திரா விட மாணவர் கழகக் கூட்டத் தில் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்:

மாவட்ட இளைஞரணி
தலைவர்-வீரபாண்டிய கட்டபொம்மன்
செயலாளர்-மு.தமிழ்ச்செல்வம்
அமைப்பாளர்-எஸ்.பிரபாகரன்
துணைத்தலைவர் மகாராசா
மாவட்ட மாணவர் கழகத் தலைவர் -சூரியா
செயலாளர்-சண்முசுந்தரம் அமைப்பாளர்-இரா.பானுமதி
திருநெல்வேலி மாநகரம்-செய லாளர் சிறீநாத்
இறுதியில் மாவட்ட மாணவர் கழக செயலாளர் சண்முக சுந்தரம் நன்றிகூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *