பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிநாதக் கொள்கையான வருணா சிரமக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை முழுமுதல் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்துறை, மருத்துவம் என்று எதுவானாலும் அவற்றின்மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகிறைன.
அவர்களின் இந்த வருணாச்சிரம் கோட்பாடுகளை நிறுவுவதற்கு சமூகநீதிக் கொள்கைகளும், அவற்றை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டமும், இரண்டையும் பாதுகாக்கும் மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளும் தடையாக உள்ளன. எனவே அவர்களின முதல் இலக்கு சமூக நீதிக் கொள்கைகளை அழிப்பது தான்.
எனவேதான் சமூக நீதியின் வேர்களை வெட்டும் வேலையை வெளிப்படையாக செய்யாமல், லேசாகக் குழி பறித்து வெந்நீர் ஊற்றும் வேலையை செய்து வருகிறது.
அரசு நிறுவனங்களாக இருந்தால்தானே சமூக நீதியைப் பின்பற்ற வேண்டும் என்று அனைத்தையும் தனியாருக்கு விற்கும் வேலையை செய்கிறார்கள். இதை ஒவ்வொரு முறையும் செய்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அரசு நிறுவன பங்குகளை விற்பதற்கென்றே தனி அமைச்சரை நியமித்தார்கள். இதையே இப்போதும் செய்கிறார்கள். ரயில்வேயின் சேவைத் துறையில் படிப்படியாக தனியார் பங்களிப்பை நுழைத்ததன் நீட்சியாக தற்போது இந்திய ரயில்வே உற்பத்தித் துறையிலும் கையை வைத்திருக்கிக்கிறார்கள்.
ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதில் புகழ் பெற்ற அய்.சி.எப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற் சாலையை முடக்கும் சதிவேலையில் ஈடுபட்டு வருகிறது ஒன்றிய பி.ஜே.பி அரசு.
1955 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலையை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு – அரசின் சார்பில் நடத்தும் மிகப்பெரிய நிறுவனமாக இதனை தொடங்கிவைத்தார். இந்த தொழிற்சாலை உலகப் புகழ்பெற்ற தொழிற்சாலை. தாம் தயாரித்த பயணிகள் ரயில் பெட்டிகளை நைஜீரியா, தான்சானியா, உகாண்டா, சிறீலங்கா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் என பல்வேறு ஆசிய -ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்டிவரும் தொழிற்சாலையாகும்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதி வேக ரயில்களான வந்தே பாரத் பெட்டிகளை மிக நேர்த்தியாக வடிவமைத்தது இந்த தொழிற்சாலை தான். வந்தே பாரத்தின் முதல் இரயிலை 18 நாட்களில் உற்பத்தி செய்து சாதனைப் படைத்தது அய்.சி.எப். இங்கு 40 வந்தே பாரத் ரயில்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும்வகையில் சோதனை ஓட்டத்தை நடத்திக் காட்டியது அய்.சி.எப்
ஆனால், இப்போது படுக்கை வசதி கொண்ட 80 ரயில்களை உருவாக்க “டிடாகர் வேகன் ” என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. உட்கார்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயிலை படுக்கை வசதி கொண்டதாக மாற்றுவதற்கு பெரிய தொழில்நுட்பம் தேவையில்லை. இதனை 70 கோடி ரூபாய்க்கு அய்.சி.எப். உற்பத்தி செய்துள்ளது. இதே ரயிலை அய்ம்பது கோடி ரூபாய் அதிகமாக அதாவது 120 கோடி ரூயாய்க்கு உற்பத்தி செய்ய டிடாகர் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு இரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை 68 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறு வனமாகும். ரயில் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனத்திற்கு இந்த துறையில் இத்தகைய அனுபவம் ஏதுமில்லை.
இன்னொரு செய்தியும் கவனிக்கத்தக்கது.
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுக்கான வடிவமைப்பை அய்.சி.எப். தான் உருவாக்கியது. அதைக் கொண்டு தான் டிடாகர் வேகன் நிறுவனம், பெரம்பூரில் உள்ள உற்பத்திக் கூடத்தில் ரயில் பெட்டிகளை தயாரிக்கப் போகிறார்கள். இங்கு கிடைக்கும் மின்சாரம், அழுத்தப்பட்ட காற்று, பாரந்தூக்கி, நீர்வசதி, சோதனைக் கூடம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளையும் அய்.சி.எப்- தான் அந்த டிடாகர் நிறுவனத்திற்கு தர வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களையும் தர வேண்டும் என்கிறார்கள் அய்.சி.எப் தொழிற் சங்கத்தினர்.
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர். கலாநிதி வீராசாமி அவர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் இரயில்கள் ICF ஆலையில் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியையும் தற்போது மீறியிருக்கிறார்கள்.
12,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிவந்த தொழிற்சாலை இது. ஓய்வுப் பெற்ற மற்றும் மறைந்த வர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளர்களைப் பணியமர்த்தாததால் தற்போது 9500 தொழிலாளர்களே உள்ளனர். எனவே காலியான பணியிடங்களை நிரப்பி தொழிற்சாலைகளைக் காக்க முன் வர வேண்டும்.
Òபுதிய பணி ஆணைகள் (work order), கூடுதல் தொழிலாளர்கள் என்று கொடுத்து ரயில்வே வாரியம் ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையை ஆதரிக்க வேண்டும். மாறாக வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தியையும், பராமரிப்பையும் -அய்சிஎஃபை முடக்கி, ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் ஏன் கொடுக்கிறது?” என்று தெரிய வில்லை என்று கூறி, அய்என்டியுசி, ஏஅய்டியுசி, சிஅய்டியு, எல்பிஎஃப் உள்ளிட்ட மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள், மேற் பார்வையாளர்கள், பொறியாளர்கள், அலுவல் பணியாளர், தொழிலாளர் என அனைத்து பிரிவினரும் ஒருமித்த குரலில் டிடாகர் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க அனுமதி கொடுக்கும் முடிவை எதிர்க்கின்றனர். இதனை எதிர்த்து சமீபத்தில் அக்டோபர் -27 அன்று ஆர்ப் பாட்டம் நடந்துள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப் பினர்களான கிரிராஜன், கலாநிதி வீராசாமி,
இரயில்வே சம்மேளனத் தலைவர் இராஜா சிறீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களின் சொத்தாக இருக்கும் இரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதன் முன்னோட் டம் இது. இதனை முறியடிக்காவிட்டால் கார்ப்பரேட் காவி முதலைகளின் வாய்க்குச் சென்றுவிடும் ரயில்வே. இந்திய ரயில்வே என்பது மக்களுக்கான ஒரு சேவைத்துறை. சேவைத் துறையாக இயங்கிட இதன் உறுப்பு நிறுவனங்களான பல்வேறு தொழிற் சாலைகள் முக்கியம்.
எனவே, பிஜேபி ஒன்றிய அரசின் நோக்கம் முறியடிக்கப்பட வேண்டும்.
– உல்லியக்குடி வை.கலையரசன்