சென்னை, ஜன. 26- 6-ஆவது ‘கேலோ இந்தியா’ இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட் டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங் களில் நடைபெற்று வருகிறது.பெரும் பாலான போட்டிகள் சென்னையி லேயே நடக்கிறது.
கோவையில் நேற்று (25.1.2024) நடைபெற்ற கோலோ இந்தியா கூடைப்பந்து விளையாட்டில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 70 – 66 என்ற புள் ளிகள் கணக்கில் பஞ்சாப்பை தோற் கடித்து தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவர் பிரிவு இறுதிப் போட்டி யில் தமிழ்நாடு 86 – 85 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
துப்பாக்கி சுடுதலில் மகளிருக் கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசி ஷன் பிரிவில் தமிழ்நாட்டின் மெல் வினா ஏஞ்சலின் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் தமிழ்நாட்டின் ஹித்தேஷ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். தடகளத்தில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டின் அலிஸ் தேவ பிரசன்னா 1.66 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும், மற்றொரு தமிழ்நாடு வீராங்கனை யான பிருந்தா 1.63 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான 200 மீட்டர்ஓட்டத்தில் தமிழ்நாட்டின் அபினயாபந்தய தூரத்தை 24.85 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாட் டின் கோகுல் பாண்டியன் பந்தய தூரத்தை 21.90 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 1000 மீட்டர் மெட்லி ரிலே பிரிவில் தேசிகா, அக்சிலின், அபினயா, அன்சிலின் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ் நாட்டு அணி 2:13.96 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றது. கருநாடகா வெள்ளிப் பதக்கமும், மகாராட்டிரா வெண் கலப் பதக்கமும் கைப்பற்றின. ஆடவருக்கான 1000 மீட்டர் ரிலே பிரிவில் அன்டன் சஞ்ஜய், நித்ய பிரகாஷ், கோகுல் பாண்டியன், சரண் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாட்டு அணி பந்தய தூரத்தை 1:55.49 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப் பில் தமிழ்நாட்டின் ரவி பிரகாஷ் (14.76 மீ) தங்கப் பதக்கமும், யுவராஜ் (14.34) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். கைப்பந்து போட்டியில் மகளிர் பிரிவில் தமிழ்நாட்டு அணி 26-24, 25-13, 25-13 என்ற செட் கணக் கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு மகளிர் அணிக்கு இது 2-ஆவது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறு வதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. ஆடவருக்கான கைப் பந்தில் தமிழ்நாட்டு அணி 24, 22-25, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் ஜம்மு & காஷ்மீர் அணியை தோற் கடித்தது. இதன் மூலம் தமிழ்நாடு ஆடவர் அணி 5 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறு வதற்கு வாய்பை பலப்படுத்திக் கொண்டது. போட்டியின் 7ஆவது நாளான நேற்று தமிழ்நாடு 23 தங் கம், 12 வெள்ளி, 23 வெண்கலத்துடன் மொத்தம் 58 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 2ஆவது இடத் துக்கு முன்னேறியது. மகாராட்டிரா 26 தங்கம், 23 வெள்ளி, -29 வெண் கலம் என 78 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியானா 3ஆவது இடத்தில் உள்ளது. பெண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத் தது. பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தையும், பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம் தாண்டி 2ஆவது இடத்தையும் பிடித்தனர்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அபிநயா (12.21 வினாடி), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோகுல் பாண் டியன் (10.89 வினாடி) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். ஸ்கு வாஷ் போட்டியில் தமிழ்நாட்டிற்கு 2 தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி யில் தமிழ்நாட்டு அணி 2-0 என்ற கணக்கில் உத்திரபிரதேசத்தையும், பெண்கள் அணிகள் பிரிவில் 2-0 என்ற கணக்கில் மராட்டியத்தையும் தோற் கடித்தன.
ஸ்குவாஷ் போட்டியில் ஏற் கெனவே பெண்கள் தனி நபர் பிரிவில் பூஜா ஆர்த்தி தங்கம் வென்று இருந்தார். சந்தேஷ், அரிஹந்த், தீபிகா, ஷமினா வெண்கல பதக்கம் பெற்றார். முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழ்நாட்டுக்கு மொத் தம் 7 பதக்கம் கிடைத்தது.
மல்லர்கம்பம் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் ரோகித் சாய்ராம் 8.50 புள்ளிகள் பெற்று வெண்கல மும், மகளிர் பிரிவில் பூமிகா 8.25 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக் கமும் பெற்றனர்.
வாள்வீச்சு போட்டியில் ஆண் கள் சப்ரே பிரிவில் அர்லின், மவு ரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங் கிய தமிழ்நாட்டு அணி அரை இறுதியில் 36-45 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரிடம் தோற்றது. இதனால் வெண்கலம் கிடைத்தது. சைக்கிளிங் பந்தயத்தில் தமிழரசி வெண்கலம் வென்றார்.
குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் பிரிவில் நவீன்குமார், கபிலன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜீவா, துர்கா ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற்றனர்.
தடகளம், ஸ்குவாஷ் போட்டி களில் தமிழ்நாடு பதக்கங்களை வேட்டையாடியது. தடகளத்தில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம், ஆகமொத்தம் 10 பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவா சில் 3 தங்கம், 4 வெண்கலம் கிடைத்துள்ளது.