சாதனை
தமிழ்நாட்டில் 24.1.2024 அன்று ஒரே நாளில் 26,000 பத்திரங்கள் பதியப்பட்டு, பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ரூ.27 கோடி வருவாய் அரசுக்கு ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல்.
நீட்டிப்பு
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங் களில் முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதிவேற்றம்
11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வ தற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளி தலை மையாசிரியர்கள் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப். 11ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
பல்சார் திட்டத்தால்
இந்தியா – ரஷ்யா இடையே கிழக்கு கடல்சார் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதால், கப்பல்களின் பயண நேரமும், சரக்கு கட்டணமும் வெகுவாக குறையும், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள் ளிட்ட தொழில்கள் வளர்ச்சி அடையும் என ஒன்றிய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல்.
பொது மாறுதல்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு
இணையவழி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், சைபர் விழிப்புணர்வு குறும்பட போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 5-க்குள் cyb erawarenesshort [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வீடியோக்களை அனுப்பலாம் என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவிப்பு.
செய்திச் சுருக்கம்
Leave a Comment