புதுடில்லி, ஜன26- பழிவாங்கும் நடவடிக் கையை தவிர்க்க புதிய வழிமுறையை உருவாக்கலாம் என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபுவிடம் வஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய் யப்பட்டார். தற்போது அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை ரிட் மனு
இதற்கிடையே அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சி.பி.அய்.க்கு மாற்ற வேண்டும். முதல் தகவல் அறிக்கையை வழங்க வேண்டும் என்று கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சூரிய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, மாநில காவல்துறையினரால் கைது செய்யப்படும் நபரின் வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றி உத்தர விட்ட தீர்ப்புகளை சுட்டிக் காட்டி னார். மேலும் அங்கித் திவாரிக்கு அமலாக்கத்துறை ஆதரவாக இல்லை வரையறுக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை பகிர தமிழ்நாடு அரசு மறுக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு அதிகாரி களுக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு முட்டுக்கட்டை விதிக்கிறது. அங்கித் திவாரிக்கு எதிரான வழக்கை விசா ரிக்கும் போர்வையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை யிட்டு வழக்குக்கு தேவையற்ற ஆவணங்களை, அமைச்சர்கள் தொடர்புடைய ஆவணங்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எடுத்துச்சென்றுள்ளனர்’ என வாதிட்டார்.
8 ஆயிரம் வழக்குகள்
அப்போது தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்து வாதாடும்போது,
‘நாட்டின் கூட்டாட்சி முறை சிதைக்கப்படுகிறது. லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம். மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்க ளில் அம லாக்கத்துறை எந்த ஒரு வழக்கையும் விசாரிப்பதில்லை.
மத்தியப் பிரதேசத்தில் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மாநிலங்களிடம் இருந்து முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத்துறை கேட்டுள்ளதா? அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் இருந்து அவர்களை அமலாக்கத்துறை காப்பாற்றக்கூடாது. அசாம் முதல மைச்சருக்கு எதிராக பதிவு செய்யப் பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். இது அரசியல் சார்ந்த வாதம் இல்லை’ என வாதிட்டனர்.
அப்போது நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவேற்றி இருக்க வேண்டுமே?,அதில் ஏதேனும் ரகசியம் உள்ளதா? ஊழல் சட்டவிரோத மணல் விற்பனை அல்லது ஊழல் வழக்கு ஏதேனும் பதிவு செய்திருந்தால், அவற்றை அமலாக்கத்துறை மேற்படி விசாரிக் கக் கூடாது என கூறுவதில் மாநில அரசின் முறைமை என்ன? எனக் கேட்டனர்.
இதற்குபதில் அளித்த மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் “பண மோசடி இல்லாத வழக்குகளை அமலாக்கத்துறை எப்படி விசாரிக்க முடியும்? சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசார ணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய அழைப் பாணைக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என பதில் அளித்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, இதை குற்றம் சாட்டப்பட்ட நபர் கூற வேண்டுமே தவிர, மாநில அரசு ஏன் கூறவேண்டும்? என வாதிட்டார்.
விசாரணைக்குத் தடை
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஅய்க்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழ் நாடு அரசுக்கு உத்தர விடுகிறோம். லஞ்ச வழக்கு புலன் விசாரணை செய்யவும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதிக்கிறோம். அங் கித் திவாரிக்கு எதிராக அமலாக்கத் துறையும் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தனர். அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்கள் உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பழிவாங்கும் கைது
இதைத்தொடர்ந்து நீதிபதி சூரிய காந்த் நேர்மையான வெளிப்படை யான விசாரணையை உறுதி செய்வது தொடர்பாக வழிமுறையை உரு வாக்கி அதை அனைத்து மாநிலங் களுக்கும் பொருந்தும் வகையில் அளியுங்கள். உதாரணத்திற்கு ஒரு மாநிலத்தில் ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையும் அமலாக்கத் துறையும் இணைந்து ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக் குநர்அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கும் வகையில் அந்தயோசனை இருக்கலாம்’ என குறிப்பிட்டார்.
நீதிபதி கே.வி.விஸ்வநாதன், ‘உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கவும்.பழிவாங்கும் வகையில் கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையிலும் ஒரு வழிமுறையை உருவாக்கலாம்’ என குறிப்பிட்ட போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பழிவாங்கும் கைது என்றால் அதை நீதிமன்றம் கவனித் துக்கொள்ளும்’ என பதில் அளித்தார்.
நீதிபதி கே.வி.விஸ்வநாதன், “அம லாக்கத்துறை பழிவாங்கும் வகையில் கைது செய்கிறது என்றோ அல்லது மாநில அரசை பழிவாங்கும் வகையில் கைது செய்கிறது என்றோ நாங்கள் குறிப்பிடவில்லை. அனைத்து மாநி லங்களிலும் அமலாக்கத்துறை உள் ளன. பழி வாங்கும் நோக்கில் கைதுகள் தொடர்ந்தால் நாடு என்ன ஆகும்? அதற்குதான் வெளிப்படையான வழிமுறை தேவைப்படுகிறது என குறிப்பிட்டார்.