தனி விமானம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 6ஆவது நாளாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் அஜய்’ தனி விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தது. இதில் 230 இந்தியர்கள் இன்று டில்லிக்கு அழைத்து வரப்பட் டனர்.
அரசாணை
கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில், கரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதிகரிப்பு
கருநாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று காலை வினாடிக்கு 9.345 கன அடியாக அதிகரித்தது. மாலை 5 மணியளவில் 18,924 கன அடியாக மீண்டும் அதிகரித்துள்ளது.
மழை நீடிக்கும்
தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 4 நாள்களுககு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
சாலைகள்
பருவமழைக்கு முன்பாக இன்னும் ஒரு வாரக் காலத்துக்குள், சென்னை மாநகராட்சியின் கீழ் ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப் பணிகளும் முடிக்கப் படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.
காப்புரிமை
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்காக தமிழ்நாடு டாக்டர் எம்ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் அறிவு சார்ந்த காப்புரிமை மய்யத்தை துணைவேந்தர் நாராயணசாமி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ் பயிற்சி
தமிழ் பேசத் தெரியாத ஊழியர்களுக்கு பேச்சுத் தமிழ் வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் ஒரு அலகான தமிழ் இணைய கல்விக் கழகத்துடன் இந்திய ஸ்டேட் வங்கி இணைந்துள்ளது.
காத்திருப்பு…
தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 785 பேர் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி தகவல்.