மதுரா, ஜன.26 வழிபாட்டுத் தலங்களின் நிலையை மாற்றக் கோரும் வழக்குகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது என்று மதுராவில் உள்ள ஷாஹித் இத்கா மசூதியை ஆய்வு செய்ய ஆணையரை நிய மிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்றும் முயற்சிக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எந்த நிவாரணமும் வழங்கத் தடை
எந்த ஒரு தெளிவான காரணமும் இன்றி ஆணையரை நியமிக்க பிறப் பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதி மன்றம் கண்டறிந்து நியமனத்தை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.வழக்கின் பராமரிப்பு குறித்து கேள்வி எழும் என்றால் அல்லது சட்டத்தால் வழக்கு தடை செய் யப்பட்டால் நீதிமன்றங்கள் எவ்வித நிவாரணமும் வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சமீபத்திய முன்னுதாரணத்தையும் இது கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
1991- வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு விதிகள் சட்டம்
ஷாஹித் இத்கா மசூதியின் நிர்வாகக் குழு, வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு விதிகள் 1991 சட்டத்தை மேற்கோள் காட்டி எந்த அடிப் படையில் பகவான் சிறீ கிருஷ்ண விராஜ்மன் மற்றும் பிற இந்து வழிபாட்டாளர்களின் பெயர்களில் உள்ள வழக்கை பரா மரிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது. மேற் கண்ட சட்டம்,1947இல் இருந்தபடி எந்த வழிபாட்டு தலத்தின் மதத் தன்மையை யும் மாற்றுவதை தடை செய்கிறது. அங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி அமைந்துள்ள மசூதி, கிருஷ்ணர் பிறந்த இடத்தில் உள்ளதாக இந்து பக்தர்கள் கூறி வருகின்றனர். மதுராவில் உள்ள மசூதி தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத் தையும் விசாரித்து தீர்ப்பு வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தன் னிடம் மாற்றிக் கொண்டுள்ளது.
ஞானவாபி மசூதி வழக்கைப் போலவே!
இந்து மதத்தின் கட்டடக்கலை அம்சங்களையும் கலைப் பொருட் களையும் கண்டுபிடிக்க முடியும் என்பதை நிரூபித்திட வளாகத்தை ஆய்வு செய்வது என்பதன் பேரில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணையத்தை நியமித்ததாக தெரிகிறது. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை அறி வியல் ஆய்வு செய்யுமாறு பணிக்கப் பட்டிருந்த நிலையில் இந்து வழி பாட்டாளர்கள் தங்கள் வழக்கை வலிமையாக்கும் வகையில் ஆதாரங் களை சேகரிக்க அதிகாரப்பூர்வமான அனுமதியைப் பெற்ற பொழுது இதே வழிமுறையைத் தான் கையாண்டார்கள். மதுரா தாவா 1968இல் சிறீ கிருஷ்ண ஜன்ம மஸ்தான் சேவா சம்ஸ்தான் மற்றும் ஷாஹி இத்கா அறக்கட்ட ளை இடையே சமரசம் செய்து ஒரு ஆணையின் மூலம் செயல்படுத்தப் பட்டது. சமர சத்தின் ஒரு பகுதியாக சன்ஸ்தான் நிலத்தின் ஒரு பகுதியை இத்காவிற்கு விட்டுக் கொடுத்தது. இந்த சமரசத்தை தான் தற்போ தைய வழக்குகள், மோசடி என்று சவால் விடுகின்றன; முழு நிலத் தையும் கோவிலுக்கே மாற்ற வேண் டும் என்றும் நிர்பந்திக்கின்றன.
முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்!
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் இந்து வம்சாவளியை கொண்டு கட்டப்பட்ட தாக கூறி அதன் மீது ஒருங்கிணைந்த தாக்கு தல் நடத்த நீதித்துறையை பயன் படுத்துவது என்பது தவறான வாய்ப்பாக வழக்கமான அம்ச மாகிவிட்டது. இத்தகைய நோக்க முடைய வழக்குகளை ஊக்குவிப் பதில் நீதிமன்றங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் 1991 ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள சட்டப் பூர்வ தடையை கருத்தில் கொண்டு இத்தகைய வழக்குகள் பராமரிக்கப் பட முடியுமா என்பதை ஆரம்ப நிலையிலேயே தீர்மானித்திட வேண்டும்.