ரூபாய் நாணயம் அளவிலான அணுசக்தி பேட்டரியை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் பெயர் ‘பிவி100’. இதிலிருந்து மின்சாரத்தை பெற முடியும். இதை 50 ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் பயன்படுத்த முடியும். இது இன்னும் ஆராய்ச்சி அளவில் உள்ளது.
எதிர்காலத்தில் அலைபேசிக்கு இந்த பேட்டரியை பயன்படுத்துவற்கான ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி மின்சாரத்தை அலைபேசி பேட்டரிக்கு பயன்படுத்துவது வெற்றிபெறுமானால், இது எரிசக்தி துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
மின்னூட்டம் தேவைப்படா அலைபேசி மின்கலம்
Leave a Comment