இறைச்சி உணவுகளுக்கு மறைமுகமாக தடைவிதித்த மாநில அரசுகள்
உணவகத்திலிருந்து பார்சல் கொடுக்கவும்,
டெலிவரி செய்யவும் தடை விதித்தது
லக்னோ, ஜன. 24- அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு விழா நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் உத்தரப் பிரதேசம் உள்பட பாஜக ஆளும் 5 மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி செய்யா தீர்கள்” என ஜோமட்டோ நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்த தக வல் வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்பட்டுள் ளது. 22.1.2024 அன்று குடமுழுக்கு நடந்து முடிந்தது. ராமன் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிர தமர் மோடி செய்தார்.
இந்நிலையில் தான் அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கு நாளன்று பாஜக ஆளும் 5 மாநிலங்கள் சார்பில் ஜோமட்டோ நிறுவனத் திடம் இறைச்சி உணவு டெலிவரி செய்ய வேண் டாம் என கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது அயோத்தி அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள் ளிட்ட 5 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்கள் சார் பில் தான் அயோத்தி ராமன் கோவில் குட முழுக்கில் பொதுமக்க ளுக்கு அசைவ உணவு டெலிவரி செய்ய வேண் டாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனை ஜோமட்டோ நிறுவனமும் ஏற்றுக் கொண்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் Zomato Care எனும் தனது எக்ஸ் பக்கத் தில், “ஹாய், அரசு வழங் கிய அறிக்கை அடிப்படை யில் உத்தரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத் தியப் பிரதேசம், ராஜஸ் தான் ஆகிய மாநிலங்க ளில் இறைச்சி உணவு டெலிவரி செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த அறிவிப்பு உங்க ளுக்கு உதவியாக இருக் கும் என நம்புகிறோம்” என தெரிவித்தது. மேலும் இறைச்சி உணவு டெலி வரி செய்வதையும் நிறுத்தியது.
முன்னதாக இன்னொரு ஆன்லைன் உணவு டெலி வரி நிறுவனமான ஸ்விக் கியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், “உத்தரப் பிரதேசத் தில் ஜனவரி 22ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள் ளது. இதனால் உங்களின் அசைவ உணவு ஆர்டர் கள் நிறுத்தப்படுவதோது, இந்த ஆர்டர்கள் 23.1.2024 முதல் ஏற்றுக் கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மாநில அரசு மற்றும் ஜோமட்டோ நிறுவனத் தின் இந்த செயலை கண் டித்து சமூகவலைதளத் தில், “புதிய இந்தியாவிற்கு வரவேற்கிறோம். இப் போது உணவை தேர்ந் தெடுக்கும் உரிமை கூட நம்மிடம் இல்லை. பெரும்பான்மையாக இருப்பவரை திருப்திப் படுத்த வணிகங்கள் பாதிக்கப்படுகிறது. இது ஒரு பாசிச நாடு. ஜோமட்டோ மற்றும் ஸ்விக்கிற்கு இது அவமானம்” என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.