புதுடில்லி, ஜன.24- நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளி ருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் மசோதாவாக ஒன்றிய அரசு கொண்டு வந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி, புதிய நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் இம் மசோதா நிறைவேறியது. பின்னர், குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றது.
ஆனால், மக்கள்தொகை கணக் கெடுப்பு நடத்தி. தொகுதி மறு வரையறை பணியையும் முடித்த பிறகுதான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று மசோ தாவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்கெனவே எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.
காங்கிரஸ் மனு
இதற்கிடையே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை உடனே அமல்படுத்த உத்தரவிடக்கோரி, மத்திய பிரதேச மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயா தாக்குர். உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே மகளிருக்கு நாடாளுமன் றம், சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் வகையில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற ஒரு பிரிவை மட்டும் ரத்து செய்வது மிகவும் கடினம் என்று தெரிவித்தது.
2 வார கால அவகாசம்
இந்நிலையில், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.1.2024) மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஜெயா தாக்குர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங், “நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சட்டத்தை அமல்படுத்து மாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று” கேட்டுக் கொண்டார்.
அதற்கு நீதிபதிகள், “இந்த தருணத்தில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒன்றிய அரசு பதில் அளிக்கும்வரை காத்திருங்கள்” என்று கூறினர்.
ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கானு அகர்வால், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண் டார். அதை ஏற்ற நீதிபதிகள், ஒன்றிய அரசு பதில் அளிக்க 2 வாரம் கால அவகாச அளித்தனர். அடுத்த கட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.